உங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானதா நீங்க நினைக்கிறது எதை தெரியுமா?

நாம் எந்த விஷயங்களுக்காக மகிழ்ச்சியடைவோம், எதற்கெல்லாம் வருத்தப்படுவோம் என்பது நமது மூளையில் இருக்கும் நரம்பியல் கடத்திகள் மூலமே முடிவுசெய்யப்படுகிறது. நமது வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென முடிவு செய்யும் சுதந்திரம் நமக்குள்ளது.

முக்கியமென நினைக்கும் விஷயங்களை மற்றவர்களும் முக்கியமாக நினைப்பதை சிலசமயம் பார்க்கலாம். அதற்கு காரணம் இருவரும் ஒரே ராசியில் பிறந்ததாக கூட இருக்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. உங்கள் ராசிப்படி நீங்கள் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயம் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கார்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது நேரத்திற்கு. ஏனெனில் அனைத்தையும் வழிநடத்த விரும்பும் இவர்கள் அதற்கான திட்டத்தை தீட்டி அதனை செயல்படுத்த சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இவர்களுக்கு அனைத்துமே போட்டிதான் போட்டியில் வெல்ல நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நன்கு அறிவோம்.

இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உறவுகளுக்குதான். ஆனால் அதைவிட இவர்கள் முக்கியமாக நினைப்பது உறவை வலிமையாக வைத்திருக்க உதவும் நேர்மைக்கு. இவர்கள் விரும்புவர்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய இவர்கள் தயாராய் இருப்பார்கள் ஆனால் அதையே இவர்கள் அவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள்.

சுதந்திரத்தை அதிகம் விரும்புபவர்கள் மிதுன ராசிக்காரர்கள். தான் மனதில் பட்டதை வெளிப்படுத்தும் உரிமை இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தனக்கு பிடித்தவற்றை செய்ய இயலாமல் கூண்டுக்குள் வாழ்வது போல வாழ இவர்களால் ஒருபோதும் முடியாது. இவர்களின் சுதந்திரத்தை ஒருபோதும் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு மிகவும் முக்கியமானது குடும்பமாகும். ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் குடும்பத்துடன் வாழ்வதுதான் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அனைவரையும் ஒன்றிணைக்கும் குடும்ப நிகழ்ச்சிகளை வடிவமைப்பது இவர்களுக்கு பிடித்தாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவர்களுக்குள் இருக்கும் நம்பிக்கைக்குத்தான். இவர்கள் என்ன செய்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும்தான் செய்வார்கள். இந்த உலகத்தில் இவர்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோளாக இருக்கும். அடையாளத்தை பெற்றுத்தரும் வெற்றிதான் இவர்களின் விருப்பமாக இருக்கும்

கன்னி இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது விசுவாசத்திற்கு. இவர்கள் எப்போதும் தங்களுடன் இருப்பவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பியவரை விட்டு செல்லமாட்டார்கள். இவர்களை போன்ற ஒருவர் உங்கள் பக்கம் இருப்பது நீங்கள் செய்த அதிர்ஷ்டம்

துலாம் இவர்கள் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மகிழ்ச்சியாக இல்லாமல் உங்களால் மகிழ்ச்சியான காரியங்களை செய்ய இயலாது. நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது உங்கள் உடனிருப்பவர்களுடன் உங்களால் மகிழ்ச்சியை பரவ வைக்க இயலாது. ஆனால் துலாம் ராசிக்காரர்களுடன் பேசினாலே உங்கள் துன்பங்களும், கவலைகளும் காணாமல் போய்விடும்.

விருச்சிகம் இவர்கள் மரபுகளை அதிகம் மதிக்கிறார்கள். கடினமாக உழைப்பதும், உறுதியாக இருப்பதும் இவர்களின் இயற்கை குணமாகும். சோதனையான காலகட்டத்தை இவர்கள் அர்த்தமுள்ள நாட்களாக பார்ப்பார்கள். உங்களை பற்றி உங்கள் தலைமுறையே எப்பொழுதும் பேசிக்கொண்டு இருக்கும்

தனுசு தனுசு ராசிக்காரர்கள் சாகசங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். புது இடங்களுக்கு செல்வது போல இவர்களை சுவாரஸ்யப்படுத்தும் செயல் வேறு எதுவுமில்லை. புது நபர்களை சந்திப்பது, புதிய கலாச்சாரத்தை கற்றுக்கொள்வது என இவர்களின் சாகச பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

மகரம் இவர்கள் அமைதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களின் சுயகட்டுப்பாடு இவர்களுக்கு வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க வழிநடத்தும். பொதுவாக எந்தவொரு பிரச்சினையும் மற்றவர்களை போல இவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதற்கு காரணம் இவர்களின் அமைதியும், சமநிலையும்தான்.

கும்பம் இவர்கள் வாழக்கையில் ஞானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எதிர்காலத்தை வழிநடத்தும் சிறந்த வழிகாட்டியாக இவர்கள் இருப்பார்கள். கும்ப ராசிக்கார்களிடம் பேசுவது உங்களுக்கு வாழ்க்கை மீதான புரிதலையும், பற்றையும் அதிகரிக்கும்

மீனம் இவர்கள் படைப்பாற்றலுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சாதாரண விஷயங்களும், செயல்களும் இவர்களுக்கு எதிரானவை என்று இவர்கள் கருதுவார்கள். இயற்கையாகவே இவர்களுக்கு இசை, ஓவியம், நடிப்பு மீது அதிக ஆர்வம் இருக்கும். அவற்றின் மூலம் மற்றவர்களை கவரவும் செய்வார்கள்.

Sharing is caring!