உடம்பில் உள்ள ஒட்டுமொத்த நோய்களை விரட்டும் வண்ணங்கள்…!!!

வண்ணங்களைப் பயன்படுத்தி நமது உடலின் அதிர்வுகளை சரிசெய்யவும், உடல் ஆற்றல், உணர்ச்சி இவற்றினை குணப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் க்ரோமோதெரபி என்பது வண்ண ஒளி சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் இருந்த ஒரு பண்டைய கால சிகிச்சை முறையாகும். இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறமும், தனக்கென தனி அதிர்வலைகளைக் கொண்டு உடலில் பல பிரச்சினைகளை சரிசெய்கின்றதாம்.

சிவப்பு

இந்த நிறம் இரத்த அழுத்தத்தை உயர்த்த பயன்படுவதாகவும், மேலும், இரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது.

பச்சை

இது உடலுக்கு நல்ல நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

பிங்க்

இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புகள் மற்றும் தமனிகளை பலப்படுத்த உதவுகிறது.

மஞ்சள்

க்ரோமோதெரபியின் பயன்படுத்தப்படும் ஒரு பிரகாசமான நிறம் என்றால் அது மஞ்சள். இந்த நிறம் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும். செரிமானத்திற்கும், சரும சுத்திகரிப்பிற்கும், வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

ஆரஞ்சு

ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி குறைவதற்கு பெரிதும் உதவுகிறது.

ஊதா

தசைகளை நிதானப்படுத்தவும், மேலும் சிறுநீர் கோளாறுகள் மற்றும் மனநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.

நீலம்

மனநிம்மதியை இது ஊக்கப்படுத்துவதோடு, தலைவலி, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, சளி, ஒற்றை தலைவலி, மனஅழுத்தம், வாத நோய் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.

இண்டிகோ

இது உடலில் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும், கண், காது, மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணப்படுத்த பயன்படுகிறது.

Sharing is caring!