உடலில் உள்ள கெட்ட கொழுப்பை மிக வேகமா கரைக்கணுமா?

உடல் எடையைக் குறைக் விரும்புபவர்கள் ஆரோக்கியமான சூப்பை தினமும் எடுத்து கொள்வது சிறந்தது.

ஏனெனில் சூப் குடிப்பதன் மூலம், அனைத்துவிதமான சத்துக்களையும் பெறலாம். இருப்பினும் அனைத்துவிதமான சூப்புகளும் ஆரோக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் ஹோட்டல்களில் விற்கப்படும் சூப்கள் வேண்டுமானால் ஆரோக்கியமற்றதாக இருக்கலாமே தவிர, வீட்டில் தயாரிக்கப்படும் அனைத்து சூப்புகளும் நிச்சயம் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

அதிலும் வெஜிடேபிள் சூப்புகளில் நார்ச்சத்து மற்றும் ஆற்றல் அதிகம் இருப்பதோடு, ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடனே எடை குறைய இந்த வெஜிடேபிள் க்ளியர் சூப்பை பருகுங்கள்

மதிய வேளையில் சாப்பிடுவதற்கு வெஜிடேபிள் க்ளியர் சூப் சிறந்ததாக இருக்கும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகள் அதிகமாகவும் இருக்கும்.

முக்கியமாக வெஜிடேபிள் க்ளியர் சூப்பில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளான ப்ராக்கோலி, கேரட் போன்றவை இருக்கும்.

பெரும்பாலும் க்ளியர் சூப்புகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளானது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டதாக இருக்கும்.

கேரட்டில் கலோரிகள் குறைவு மற்றும் ப்ராக்கோலியில் பைட்டோகெமிக்கல்கள் உள்ளது.

இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியவை. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைத்தால், கார்ன்ஸ்டார்ச் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இது ஊட்டச்சத்துக்களின் மதிப்பைக் குறைக்கும்.

தேவையான பொருட்கள்
 • ப்ராக்கோலி – 1 கப்
 • பச்சை பட்டாணி – 1 கப்
 • குடைமிளகாய் – 1 கப்
 • பூண்டு – 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
 • வெங்காயம் – 1 (நறுக்கியது)
 • மிளகுத் தூள் – சிறிது
 • உப்பு – சுவைக்கேற்ப
 • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
 • முதலில் அனைத்து காய்கறிகளையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
 • பின் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம் மற்றும் பூண்டுகளை பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 • பின்பு அதில் அனைத்து காய்கறிகளையும் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
 • பிறகு அதில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
 • இறுதியில் அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், வெஜிடேபிள் க்ளியர் சூப் தயார்.

Sharing is caring!