உடலுக்கு சுகம் தரும் சுண்டைக்காய்

சுண்டைக்காய் மிகச்சிறந்த மருத்துவ பயன்களை கொண்டுள்ளது, இதனை வாரத்தில்  இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நிவாரணம் தரும் அருமருந்தாக திகழ்கிறது.  சுண்டைக்காய் பொதுவாக இரண்டு வகைப்படும், மலைசுண்டைக்காய், பால்சுண்டைக்காயாகும்.  இதில் மலைச்சுண்டைக்காய் காடுகளில் வளர்பவை, இதனை  வற்றல் செய்ய பயன்படுத்துவார்கள். பால் சுண்டை பச்சையாகவே சமையலில் சேர்க்கலாம்.  இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை  பார்க்கலாம்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கிறது.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து,  ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

சிறிது நேரம் வேலை பார்த்தாலே சோர்வடையும்  நபர்கள்,  இதனை  தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது,  உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெற முடியும்.

வயிற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளை நீக்கி, வயிற்றுக்கு இதம் அளிப்பவை, மேலும் மூல நோயால் அவதிப்படும் நபர்கள்  சுண்டைக்காயை வாரம் இரு முறை உணவில் எடுத்துக்கொண்டால் மூல நோய் குணமடையும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் நுண்புழு பிரச்னையை, இந்த சுண்டைக்காய் சரிசெய்வதுடன், மலச்சிக்கலையும்  நீக்கும்.

இரத்த சர்க்கரை அளவு கூடுவதினால் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு இந்த காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வருத்து பொடி செய்து உட்கொண்டு வர ரத்த சர்க்கரை அளவு சீராகும்.

வாந்தி, மயக்கம் நீங்க சுண்டைக்காயை சூப் செய்து அருந்தி வர விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் ஜீரண தன்மையை அதிகரிக்கும்.

Sharing is caring!