உடலுக்கு வலு சேர்க்கும் கேழ்வரகு

செய்யும் உணவு வகை சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் வகையில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணமாக இருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் குழந்தைகளின் வயிறு நிரம்பும் வகையிலும் இருக்க வேண்டும். இதுதான் இன்றைய பெரும்பாலான அம்மாக்களின் கோரிக்கையாக இருக்கும். தினம் தினம் ஒரே வகையான உணவு என்றால் குழந்தைகளுக்குப் போரடிக்கும். அதை மாற்றி பாரம்பரிய உணவு வகைகள்,நவீன உணவு வகைகள் இரண்டையுமே சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்கி விட்டால் அவர்கள் வளர வளர  நமது பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் நவீன உணவு வகைகள்   இரண்டையும் சுவைத்து உண்ணப் பழகுவார்கள். அந்த வகையில் கேழ்வரகில் செய்யப்படும் உணவு வகைகள் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ந்த பருவத்தினருக்கும். 40 வயதைக் கடந்தவர்களுக்கும். முதியவர்களுக்கும் சிறந்த உணவாக மருத்துவர்களாலேயே பரிந்துரைக்கப்படுகிறது.

கேழ்வரகு களி, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு அடை என்று அரைத்த மாவை அரைக்காமல் கேழ்வரகு குலுக்கல் புட்டு செய்வோம். இது அருமையான ஸ்நாக்ஸாக இருக்கும். புதுமையானதாகவும் இருக்கும். எளிமையான முறையில் செய்வதால் இல்லத்தரசிகளின் பெஸ்ட் சாய்ஸாகவும் இருக்கும்.

தேவை:

கேழ்வரகு – 1 கப், வெல்லம் – 1 கப், வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை- அரை கப்,உப்பு, நெய் – தேவைக்கேற்ப…

செய்முறை:

கேழ்வரகுடன் சிறிது உப்பு சேர்த்து தளர பிசைந்து அடையாக சுட்டெடுக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சி கசடு நீக்கி பாகில் கேழ்வரகு அடையைத் துண்டுகளாக்கி போடவும். அவை பாகுடன் நன்றாக ஊறியதும் வேர்க்கடலையைத் தூவி கொடுக்கவும். தெவிட்டாத அருமையான ஸ்நாக்ஸ் இது. இரண்டு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். வெல்லம் சேர்ப்பதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்றது.

வித்தியாசமாக செய்யும் போது அடம்பிடிக்கும் குழந்தைகளும் மறுக்காமல் சாப்பிடுவார்கள். பாரம்பரியத்தைப் பழக்குங்கள். எங்கள் உணவு என்ற பெருமையுடன் இன்றைய தலைமுறை வளரட்டும்.

Sharing is caring!