உடல்பருமன் அதிகரித்தால் மறதியும் அதிகரிக்குமாம்…

உடல்பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு , இதய நோய்கள், மன அழுத்தம், சோர்வு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஞாபக சக்தியையும் விரைவில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

உடற்பருமனானது, உடலின் பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டு அளவை பாதிப்பதனால், அவை மூளையின் செயலாக்கம் மற்றும் வடிவமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள், நினைவுத்திறனைக் கடுமையாக பாதிக்கவும் செய்கிறது.உடல்பருமன் கொண்டவர்கள் குறைந்த நினைவுத்திறன் கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் கடைசியாகச் சாப்பிட்ட உணவையும் கூட மறந்திருப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

உடல்பருமன், நினைவுத்திறனுக்குக் காரணமான ஹிப்போகேம்பஸ் பகுதியில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதன்மூலம் தீர்மானித்தல், கற்றல், ஞாபக சக்தி, புரிந்துகொள்ளுதல், உணர்வுகளை புரிந்துகொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் பாதிக்கப்படுகின்றன.

உடலின் பிஎம்ஐ அளவின்படி, 18 முதல் 35 வயதிற்குட்பட்ட 50 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களின் பிஎம்ஐ அளவு 18 முதல் 51 வரை இருந்தது கண்டறியப்பட்டது. பிஎம்ஐ 18 முதல் 25 வரை இருந்தால், ஆரோக்கியமானவர் என்றும், 25 முதல் 30 வரை இருந்தால், அதிக எடை கொண்டவர்கள் என்றும் 30க்கும் மேலிருந்தால், உடல்பருமன் கொண்டவர்கள் என்றும் அளவிடப்படுகிறது.

இந்த பங்கேற்பாளர்களுக்கு, பொருட்களை மறைத்து வைத்துக் கண்டுபிடிக்கும் சிறு விளையாட்டுச் சோதனையும் நடத்தப்பட்டது. அதில் சில பொருட்கள் அவர்களிடம் கொடுத்து, மறைத்து அவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, என்னென்ன பொருட்களை, எங்கே, எப்போது மறைத்து வைத்தோம் என்பதே அவர்களுக்கு நினைவில் இல்லை.

இந்த ஆய்வின் முடிவானது, ‘உடலின் பிஎம்ஐ அளவு அதிகரிக்க அதிகரிக்க மறதி அதிகமாகும். மறந்து விடாதீர்கள்’ என அறிவுத்துகிறது

Sharing is caring!