உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் இஞ்சி சாறு அருந்துங்கள்!

சென்னை:
தினமும் இஞ்சி சாறு எடுத்துக் கொண்டால் உடல் மிகுந்த ஆரோக்கியம் அடையும்.

காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வு அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசி அதிகரிக்கும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்ப கால ஆஸ்துமா, இருமல் குணமாகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல்,  களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்

ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன்  கிடைக்கும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!