உடல் எடையைக் குறைக்கும் பைனாப்பிள்கௌவா …!

பைனாப்பிள்கௌவா, பார்ப்பதற்கு கொய்யாப்பழம் வடிவில் காணப்படும். ஆனால், இந்த பழம் கொய்யாப்பழ வகையை சார்ந்தது அல்ல. இந்த பழம் பொதுவாக அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இது இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவையுடன் இருக்கும். அதிகமாக இந்த பழத்தை சமையளில் பயன்படுத்துவர்.

பைனாப்பிள்கௌவா, வைட்டமின் சி,பி, ஏ, கே, ஏ, தாது உப்புக்கள், மாங்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது.

பைனாப்பிள்கௌவா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ள பைனாப்பிள்கௌவா சாப்பிடுவதால், இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிக‌ரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதை உறுதி செய்கிறது.

வயிற்று கோளாருகளான வயிற்றுப்போக்கு, அஜீரணம், வயிற்று உப்புசம், வயிறு மந்தம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

குறைந்த கலோரிகளை கொண்ட இந்த பழம் எடையை குறைக்க பெரும் உதவி செய்கிறது, மேலும் உடலில் மற்றும் ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை கரைக்கிறது.

பொட்டாசியம் நிறைந்துள்ள பைனாப்பிள்கௌவா, உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்கள்மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் மூளையின்  நரம்புகளில் ஏற்படும் தடையை சரி செய்கிறது.

பைனாப்பிள்கௌவாவில் உள்ள தாதுக்களால் எலும்புகளின் வலிமை அதிகரித்து, எலும்பு பிரச்னை வராமல் தடுக்க உதவுகிறது.

இந்த பழத்தை சாப்பிடுவதனால்,  இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, நீரிழிவு பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும்.

நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிசன் ஏற்றத்தை கொடுத்து, நாள் முழுக்க எனர்ஜியாக இருக்க உதவுகிறது பைனாப்பிள்கௌவா.

Sharing is caring!