உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கணுமா..?

எடை குறைப்பதற்காக எண்ணற்ற முயற்சிகள் எடுத்தும் இன்னமும் எந்த பலனும் கிடைக்காமல் இருக்கிறதா அப்படியென்றால் இந்த இது உங்களுக்குத் தான்.

ஒரே நேரத்தில் ஐந்து கிலோ அல்லது பத்துகிலோ என்று மொத்தமாக எல்லாம் குறைக்க முடியாது என்கிற உண்மையை முதலில் எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக மட்டுமே குறைக்க முடியும் அதுவும் அதற்காக நீண்ட பிரயத்தனம் படவேண்டியிருக்கும்.

பெயரிளவில் டயட் இருந்து விட்டு அதிகமான கலோரியை எடுத்துக் கொள்வது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்று இருந்தால் நிச்சயமாக இதனை நாம் அடைய முடியாது.

இந்த பதிவில் பீட்ரூட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

பீட்ரூட்டில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. 100 ml பீட்ரூட் சாற்றில் வெறும் 35 கலோரிகளே இருக்கிறதாம். எனவே, இவை உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் இவற்றில் ஏராளமான ஊட்டசத்துக்களும் உள்ளன.

அது மட்டும் அல்ல, இரு சிவப்பு நிற உணவுகள் ஒன்றாக சேர்ந்தால் ஒரு அற்புத விடை கிடைக்குமாம்.

அதவாது, மாதுளையும் பீட்ரூட்டையும் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேவையானவை
  • மாதுளை 1 கப்
  • நறுக்கிய பீட்ரூட் 2 கப்
  • எலுமிச்சை சாரி 3 ஸ்பூன்
  • சிறிது கருப்பு உப்பு (அ) சாதாரண உப்பு
செய்முறை
  1. உடல் எடையை உடனடியாக குறைக்க, முதலில் மாதுளை மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
  2. அடுத்து, இவற்றுடன் சிறிது நீர், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, குடித்து வரவும்.
  3. இதனை தொடர்ந்து குடித்து வந்தால், இவற்றில் உள்ள பி-காம்ப்லெக்ஸ் வைட்டமின் செரிமானத்தை சீராக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளும்.
  4. உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு பீட்ரூட் மிக சிறந்த தீர்வாகும்.

Sharing is caring!