உடல் எடையை குறைக்கும் ஜூஸ்!

வெள்ளரி நிலையான எடை இழப்பு ஆதரமாக  அறியப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்கள் உணவு பட்டியலில் பல்வேறு வகைகளில் வெள்ளரிக்காய்களைப் பயன்படுத்துகின்றனர்.

1. வெள்ளரிக்காயின்  95 சதவிகிதம் தண்ணீர் மட்டுமே உள்ளது , மேலும்  நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும்.

2. வெள்ளரிக்காய்  ‘எதிர்மறை கலோரி’ உணவு என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் அதன் மிகக் குறைவான கலோரி எண்ணிக்கையே அதற்கு காரணம். நூறு கிராம் வெள்ளரிகளில்  வெறும் 16 கலோரிகளை மட்டுமே உள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க முடிகிறது என்று நம்பப்படுகிறது.

3. ‘ஹீலிங் உணவுகள்’ என்ற புத்தகத்தின் படி, வெள்ளரிகள் எப்சினைக் கொண்டுள்ளன, இது புரதத்தை உடைக்க உதவும் செரிமான நொதி. ஆரோக்கியமான செரிமானம் எடை இழப்புக்கு முக்கியமாகும்.

4. வெள்ளரிக்காய்  டீடாக்ஸ்  செய்ய  உதவுகிறது. வெள்ளரிக்காய் 95% நீர் , அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் இருப்பதால் உடலின்  தண்ணீர் இழப்பை தடுக்கிறது .

வெள்ளரிக்காயின்  நன்மைகளை பார்த்தோம் இனி எடை குறைப்பிற்கான வெள்ளரி ஜூஸ் எப்படி தாயரிப்பது என பார்க்கலாம்;

தேவையான பொருட்கள் எவை ?

• நடுத்தர வெள்ளரி -1

• செலரி கீரை           –  2 பெரிய தண்டுகள்

• ஆப்பிள்                    – 1 (நறுக்கியது)

வெள்ளரி ஜூஸ் எப்படி தயாரிப்பது ?

வெள்ளரி, செலரி தண்டுகள் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை ஒன்றாக  அரைக்கவும் .  பின்னர் வடிகட்டி
ஃப்ரஷாக  குடிக்கவும்.

இந்த ஜூஸ் எவ்வாறு உடல் எடையை குறைக்கும் ?

 1. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் ,  வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவு.


2.  செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன.. இது உடல் எடை குறைப்பதற்கு மிக சிறந்த ஒன்றாகும். அது மட்டும்மல்லாமல்  செலரி நமக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும்.

3.ஆப்பிளில் உள்ள அசிடிக் ஆசிட் (Acetic Acid) உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது.

மேலும் ஆப்பிள் , செலரி மற்றும் வெள்ளரி கலந்த ஜீஸ்  குடிப்பதினால் எடை இழப்பு பன்மடங்கு அதிகரிக்கும். மேலும் கோடை காலத்தில் ஏற்படும் நீரிழப்பினை  சரிசெய்யும்.

Sharing is caring!