உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான உடற்பயிற்சிகள் இதோ!

இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் உடல் எடையினை குறைக்க கஷ்டப்படுவதுண்டு.

இதற்காக டயட்டுகள் கடின உடற்பயிற்சிகளை போன்றவற்றை மேற்கொள்ளுவதுண்டு.

அந்தவகையில் கடின உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் தினமும் சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும் உடல் எடையை கட்டுகோப்பாக வைத்திருக்க முடியும்.

தற்போது உடல் பருமனானவர்கள் மேற்கொள்ள வேண்டிய 10 முக்கிய உடற்பயிற்சியினை இங்கு பார்ப்போம்.

பிளாங்க் உடற்பயிற்சி

குப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும்.

அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.

ஜம்பிங் ஜாக்

கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும்.

இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும்.

பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

ஸ்கிப்பிங்

நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.

புஷ் அப்

புஷ் அப் செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது

பை சைக்கிள் உடற்பயிற்சி

அடி வயிற்று தசைகளை உறுதிப்படுத்துவதற்காக பை சைக்கிள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

எலிப்டிகர் ட்ரெய்னர்

இந்த கருவியின் மூலம் எளிய உடற்பயிற்சி (weight) மேற்கொண்டு, தொப்பையை குறைக்கலாம். 30 நிமிடங்கள் பயிற்சி செய்வதன் மூலம், 300 கலோரி வரை எரிக்க முடியும்.

பை சைக்கிளிங்

சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம்.

ஓடுதல்

கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். இவை இரண்டில் ஓடுதல் மட்டுமே வேகமாக கொழுப்பை கரைத்து விடுகிறது.

யோகா

யோகாசனத்தை பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

சலபாசனம்

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும். மற்றும் மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.

Sharing is caring!