உடல் எடையை குறைக்க உதவும் இரவு நேர பானங்கள்..!

உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், ஏற்கனவே உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க கூடிய பானங்களை பார்ப்போம், அதிலும் இந்த பானக்களை இரவு நேரங்களில், படுக்கைக்கு செல்லும் முன்னர் அருந்துவதால் விரைவாக நல்ல பலனை அடைய முடியும்.

வெதுவெதுப்பான நீரில் கலந்த எலுமிச்சை சாறு

உடல் எடையை கட்டுக்குள் வைக்க பல காலமாக சொல்லப்படும் பானம், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதாகும். இந்த பானத்தை இரவில் தூங்க செல்வதற்கு முன் எடுத்துக்கொள்வதனால்,  மெட்டபாலிச அளவு அதிகரித்து, முறையான செரிமான சக்தியை பெற முடியும். அதோடு இந்த பானம் கல்லீரலை சுத்தம் செய்து, உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

வெள்ளரி ஜூஸ்


உடல் எடைய குறைக்க பெரிதும் உதவி செய்யும் பானங்களில் மற்றொன்று வெள்ளரி ஜூஸ், இந்த ஜூஸ் மெட்டபாலிச அளவை அதிகரிக்க உதவுகிறது. நீர்ச்சத்து அதிகம் கொண்டுள்ள வெள்ளரி, உடலில் நீர் வற்றுவதை தடுக்கிறது. மேலும், குறைந்த எரிசக்தியை கொண்டுள்ள வெள்ளரியில் அதிகமான அளவு ஃபைபர் இருப்பதுடன், உட‌லில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி,  உடல் கொழுப்பையும் குறைக்கிறது.

பால்


உடல் எடையை குறைக்க பால் உதவுகிறது, பாலில் கால்சியம், புரதம், ஜிங், வைட்டமின் பி, உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இது பசியை தூண்டும் ஹார்மோனுக்கு எதிராக செயல்பட்டு உடல் எடை குறைவதை உறுதிப்படுத்துகிறது.

கிரீன் டீ 


கிரீன் டீ குறைந்த அளவு  கஃபினை கொண்டுள்ளது, இது உடலில் மெட்டபாலிச அளவை கூட்டி உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனை இரவில் அருந்துவதனால்  உடல் எடையை விரைவிலேயே குறைக்க இயலும்.
ஜப்பான் பல்கலைக்கழகம் 2017ல் செய்த ஆய்வின் படி இரவில் கிரீன் டீ அருந்துவதனால் நல்ல ஓய்வு நிலையை பெற முடியும் என்கிறது.

இலவங்கப்பட்டை  டீ


நோய் எதிர்பு சக்தியை அதிக அளவு கொண்டுள்ள இலவங்கப்பட்டையில்,  மன அழுத்ததை குறைக்க கூடிய தன்மையும் அதிகம். இந்த இலவங்கப்பட்டை பொடியை நீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் டீயை இரவு நேரத்தில், படுக்கைக்கு செல்லும் முன் எடுத்துக்கொள்வதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறி,  உடல் பருமனை விரைவாக குறைக்க முடியும்.

Sharing is caring!