உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டுமா? எளிய வழிமுறை!!

தினமும் உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு மாதத்தில் தோராயமாக மூன்று கிலோ வரை எடையை குறைக்க முடியும்.

உடல்நலத்தை காக்க வேண்டும் என வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வாக்கிங் செல்பவர்களே அதிகம்.

மேலும் உடல் எடையை குறைந்து, பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று இன்றைய தலைமுறைக்கு ஆசை உள்ளது.

இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த உடற்பயிற்சி கருவிகளை வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலரும் உள்ளனர்.

அதேபோல் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஐந்து நிமிடத்திற்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கலாம். இப்படி செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நாம் பெறலாம்.

நாம் தினமும் வீட்டு வேலை செய்வதன் மூலம் நம்மால் 100 கலோரிகளை எரிக்க முடியும். அதற்கான எளிய உடற்பயிற்சி பற்றி இங்கு காண்போம்.

முதல் உடற்பயிற்சி தினமும் 30 நிமிடம் 1 மைல் தூரத்துக்கு நடைபயிற்சி செய்யலாம்.

இரண்டாம் உடற்பயிற்சி தினமும் 20 நிமிடம் தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யலாம்.

மூன்றாம் உடற்பயிற்சி 30 நிமிடத்திற்கு வீட்டை சுத்தம் செய்வதன் மூலமாக கலோரிகளை எரிக்க முடியும்.

நான்காம் உடற்பயிற்சி 10 நிமிடத்திற்கு ஓட்டப் பயிற்சி செய்வதால் உடல் எடையை குறைக்க முடியும்.

ஐந்தாம் உடற்பயிற்சி தினமும் ஸ்கிப்பிங் 10 நிமிடம் செய்தால் உடல் எடையை குறைக்க முடியும்.

ஆறாம் உடற்பயிற்சி தினமும் 20 நிமிடம் வீட்டின் தரையை நன்கு குனிந்து துடைத்து சுத்தம் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். இந்த ஆறு பயிற்சியை வீட்டில் செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.

Sharing is caring!