உடல் எடை ஆரோக்கியமாக கூட உலர் திராட்சை

தித்திப்பு சுவை கொண்ட  உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக் கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது. திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை தயாரிக்கின்றனர்.  இதில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிவிடுவதால் ஏராளமான நார்ச்சத்துக்கள்  நமக்கு கிடைக்கும்.

  •  உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. தினமும் ஒரு  கை உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை உடலில் அதிகரித்திட இது உதவிடும். இதனால் வேகமாக உடல் எடை கூடும்.
  • ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு அதிகம் இருப்பதால் புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து இது நம்மைக் காத்திடும்.
  • மேலும்  பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி , ர‌த்தசோகை போன்றவை நீங்கும். மேலும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், முடி உதிர்வு பிரச்ச‌னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்
  • வெயில் காலங்களில் ஏற்படும் கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களிலிருந்து நம்மை  பாதுகாப்பதுடன் , முகப் பொலிவையும் அதிகரிக்கும்.
  • இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பார்வைக்குறைபாடு நீங்கும்.
  • நார்ச்சத்து அதிகம்  இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவக்கூடியது உலர் திராட்சை..

Sharing is caring!