உடல் பருமனுக்கு காரணம் தைராய்டு -ஆகவும் இருக்கலாம்…

பெண்களின்தலையாய பிரச்னையாக மாறிவருகிறது தைராய்டு என்கிறது மருத்துவத்துறை. அச்சப்படக்கூடிய அளவுக்கு அதிபயங்கரமான நோய் கிடையாது என்றாலும் பலபிரச்னைகளை உண்டாக்குவதால் இதற்கு சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமே. எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளே தைராய்டு என்றழைக்கப்படுகிறது.

ஆண்களைக் குறைவாக தாக்கும் தைராய்டுபிரச்னை பெண்களை அதிகம் தாக்கி வருகிறது. நோய்க்கிருமிகளால் தைராய்டு வருவதில்லை, அயோடின் சத்து குறைபாட்டினால் தைராய்டு பிரச்னை வருகிறது.

தைராய்டு சுரப்பி:
நமது கழுத்துப்பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்தாலும் குறைந்தாலும் பல பிரச்னைகளை உண்டாக்கும்.இந்த ஹார்மோனைக் கட்டுக்குள் வைத்தால் பாதிப்புகளையும் கட்டுக்குள் வைக்கலாம்.

தைராய்டு வகைகள்:
ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என இரண்டு வகையான பாதிப்புகள் உண்டாகிறது. தைராய்டு ஹார்மோன் குறைவான அளவு சுரந் தால் அது ஹைப்போ தைராய்டு என்றும் அதிக அளவு சுரந்தால் அது ஹைப்பர் தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது.

ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்:
எப்போதும் உறக்கம் வருவது போன்று இருப்பது, உடல் மந்தமாக சோர்வாக இருப்பதும் கூட தைராய்டு பிரச்னைக்கு ஒரு அறிகுறியாக சொல்லலாம். எப்போதும் ஒருவித மன அழுத்தத்தோடு இருப்பதும், டென்ஷனாகவே உங்களை வைத்துக்கொள்வதற்கும் காரணம் தைராய்டு பிரச்னைதான்.

சிலர் பட்டியலிட்டு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சத்தான டயட்டை பின்பற்றுவார்கள். குறைந்த அளவே உணவை எடுத்துக்கொள்கிறேன். ஆனாலும் உடல் எடை கூடிவிட்டது என்று புலம்புவார்கள். இந்த மனநிலையில் நீங்கள் இருந்தாலும் ஒரு தைராய்டு பரிசோதனை தேவையே.

Sharing is caring!