உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்?

கர்ப்பம் தவிர, பருவமடைதல், விரைவாக உடல் எடையை குறைத்தல்அதிக  பருமனாக இருப்பது ஆகியவை பெரும்பாலும் வயிறு, மார்பகங்கள், தொடைகள், இடுப்பு மற்றும் மேல் கைகளில் தோலின் மீது நீண்ட கோட்டை  ஏற்படுத்தும்.  கடுமையான ஒவ்வாமை அல்லது தோல் பிரச்சினைகள், ஆஸ்துமா, கீல்வாதம் போன்ற சில பிரச்னைகளுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதும் கொடுக்கல ஏற்பட காரணமாக இருக்கின்றனர்.

இவை தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும், இது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. இத்தகைய கோடுகளை மறையச் செய்வதற்கான  சிகிச்சை குறித்து பார்க்கலாம்.

தண்ணீர் குடித்தல்:

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை மென்மையாகவும், நாள் முழுவதும் நன்கு நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும். காபி போன்ற  பானங்களை உட்கொள்வதை  குறைப்பது நல்லது. ஏனெனில் அவை தோலில் ஏற்படும் வரிகளை ஊக்குவிக்கும் வாய்ப்புகள்  அதிகம்.

சத்தான உணவு

பலவிதமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவை உட்கொள்வது   ஆரோக்யமான சருமத்தை பாதுகாக்க உதவும். உணவில் வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, புரதம், துத்தநாகம் நிறைந்த உணவுகள் உ சரும ஆரோக்யத்தை அதிகரிக்க உதவும்.

Sharing is caring!