உண்மையாக இருக்க விரும்பும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்..!

நட்சத்திரங்களின் குணாதிசயங்களைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசை யில் 26 வது நட்சத்திரம் உத்திரட்டாதி.  இந்நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான். சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மூன்றாவது நட்சத்திரம் இது. இந்த நட் சத்திரத்தைக் கொண்டவர்கள்  மீன ராசியைக் கொண்டிருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சூரியனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். கள்ளங்கபடமில்லாமல் வெளிப்படை யாக பேசும் குணத்தைக் கொண்டவர்களான நீங்கள் ரகசியத்தைப் பாதுகாப்பதில் வல்லவர்கள். பழகுவதற்கு இனிமையான குணங்களைக் கொண்டிருக்கும் நீங்கள் இரக்ககுணமும் தயாள குணமும் கொண்டவர்களாக விளங்குவீர்கள். எல்லோரி டமும் உண்மையாக நடந்துகொள்ள நினைப்பீர்கள். அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கும் நீங்கள் அதிகாரம் செய்வதையும் செய்பவர்களையும் விலக்கி வைப்பீர் கள். உதவி என்று வருபவருக்கு இல்லையென்று மறுக்கமாட்டீர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் புதனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். இயல்பாகவே வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும் பொருள் புகழின் மீது மோகம் கொள்பவராக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையை வலியுறுத்துவீர்கள். வயது குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களது ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கற்பனை வளம் மிக்கவராக இருப்பீர்கள். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர் களான நீங்கள்   வாய்ப்பு கிடைத்தால் பிரகாசமான எதிர்காலத்தைப் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். பேசியே காரியம் சாதித்துக்கொள்ளும் குணத்தை உடையவர்கள். அடிக்கடி மனதை மாற்றிக்கொண்டு குழப்பமடைவீர்கள். தன்னிச்சையாக முடிவெடுப்பதும் தேவையற்ற மனமாற்றமும் கொண்டிருப்பீர்கள். கடமை என்று வந்துவிட்டால் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். வாழ்வில் உண்மையையே பேசுவீர் கள். இறைபக்தி மிகுந்த நீங்கள்  வாழ்வில் எந்த பிரச்னை வந்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடுவீர்கள். சட்டென்று உணர்ச்சிவசப்படு வீர்கள். திட்டமிட்டு செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகளைத் தொட்டு விடுவீர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள் உண்மையாக இருப்பீர்கள். கள்ளங்கபடமில்லாமல் வெளிப்படையாக பேசும் குணத்தைக் கொண்டிருப்பீர்கள். இறைபக்தி மிக்கவர்கள். வாழ்வின் மத்திம காலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்வீர்கள். திறமைமிக்கவர்களாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ளா மல் தன்னடக்கத்துடன் வாழவே விரும்புவீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பமுற்று காணப்படுவீர்கள். மனதில் குழப்பங்களை அண்ட விடாமல் இருந் தால் வாழ்க்கை மேலும் சிறக்கும்.

Sharing is caring!