உயர் இரத்த அழுத்தத்திற்கு தீர்வாகும் மாதுளைச் சாறின் மகத்துவம்..!

எளிதில் இதயத்தை பாதிக்கக்கூடியது உயர் இரத்த அழுத்தம். உயர் இரத்த அழுத்தத்தை போக்கக்கூடிய சில உணவுகளை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொரித்த உணவுகள், மசாலா நிறைந்த உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகும்.துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனென்றால் அவற்றில் சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது. சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் கடினத்தன்மையாக மாறிவிடுகிறது.உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாதுளை சாறு குடித்து வரலாம். மாதுளையில் நார்ச்சத்து மற்றும் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது. பொட்டாஷியம் அதிகமாக உட்கொண்டால் உடலில் சோடியத்தின் அளவு குறையும்.100 கிராம் மாதுளையில் 236 மில்லிகிராம் பொட்டாஷியம் உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய பாலிஃபினால் என்னும் பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து இருதய ஆரோக்கியத்தையும் சீராக்குகிறது.

Sharing is caring!