உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் உணவு வகைகள்!

உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு.

ஏனெனில் அந்த உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் உயிர் போகும் அளவிலான தீமையை விளைவிக்கும்.

இப்போது அனைவரும் ஆரோக்கியம் என்று நினைத்திருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த உணவுப் பொருட்கள் எவையென்று பார்ப்போமா!!!

உருளைக்கிழங்கு

பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.

மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும்.

அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

தக்காளி

மற்றொரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் தக்காளி. இதிலும் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது.

அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.

ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடும்.

ருபார்ப்

இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.

ஆப்பிள்

என்ன அதிர்ச்சியாக உள்ளதா? தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் பல்வேறு பிரச்சனைகளை போக்க வல்லது. ஆனால் அந்த விளக்கெண்ணெய் தயாரிக்கும் ஆமணக்கு விதையை சாப்பிட்டால், உயிரைத் தான் விட வேண்டும்.

ஏனெனில் அதன் விதையில் ரிசின் என்னும் ஆபத்தான விஷம் உள்ளது. அதிலும் இதன் ஒரு விதை மனிதரையும், நான்கு விதை குதிரையையும் கொல்லும் திறன் கொண்டது. ஆகவே விளக்கெண்ணெயை தயாரிக்க உதவும் ஆமணக்கு விதையில் இருந்து விலகி இருங்கள்.

காளான்

காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன.

அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், உயிரை விட நேரிடும்.

Sharing is caring!