உயிரைக் கொல்லும் ஆப்பிள் தேவையா….?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உங்களுடைய வாழ்நாள் முழுக்க மருத்துவரையே சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருப்போம்.

நாம் சாப்பிடும் எல்லா உணவுகளையும் விட ஆப்பிளில் தீங்கில்லாத உயரிய ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன என்பது தான் அதன் காரணம்.

முன்பெல்லாம் ஆப்பிள் கடைகளுக்கு வரும். அதிகபட்சம் ஒருவாரம் தாங்கும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும்.

ஏனென்றால் அதில் பெரிதாக ரசாயனங்கள் கலக்கப்படாமல் இருந்தது. ஆப்பிள் எப்போது மக்களின் நம்பிக்கைக்கு உரிய உணவாக மாறியதோ அப்போதே அதிலும் ரசாயனக் கலப்புகள் உண்டாக ஆரம்பித்துவிட்டன.

அப்படி ஆப்பிளில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்டிக்கரில் நம்பர்

ஆப்பிள் வாங்கும்போது அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் சில நம்பர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்கள் பற்றி நாம் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி ஆப்பிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு PLU code (price lookup number) என்று பெயர்.

அதாவது நாம் சாப்பிடுகின்ற ஆப்பிள் இயற்கையாக விளைவிக்கப்பட்டதா அல்லது அது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா ரசாயனக் கலப்பு கொண்டதா என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காக தான் அந்த ஸ்டிக்கரில் உள்ள எண்.

இலக்க எண்கள்

இந்த PLU code (price lookup number) என்பது ஆப்பிளில் 4,5, கொண்ட எண்கள் இருக்கும். அந்த எண் தான் பொதுவாக காய்கறிகள் எந்த தன்மையில் விளைவிக்கப்பட்டவை, அதில் ரசாயனக் கலப்பு இருக்கிறதா என்றெல்லாம் அறிந்து கொள்ள இயலும்.

நான்கு இலக்கம்

PLU code (price lookup number) ல் நான்கு இலக்க எண்கள் இருந்தால் அந்த ஆப்பிள் முழுக்க முழுக்க வேதி உரங்கள் கலந்து விளைவிக்கப்பட்டது என்று அர்த்தம்.

ஐந்து இலக்கம்

PLU code (price lookup number) ல் ஐந்து இலக்க எண்கள் இருந்தால் அதிலும் குறிப்பாக 8 என்ற எண் கொண்டு தொடங்கினால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆப்பிள் என்று அர்த்தம்.

9 என்ற எண்

ஆப்பிளில் PLU code (price lookup number) ல் ஐந்து இலக்க எண்களும் அதில் 9 என்ற எண் கொண்டு தொடங்கியது என்றால் அந்த ஆப்பிள் முழுக்க முழுக்க இயற்கை முறையில் மரபணு கலப்பு இல்லாமல் விளைவிக்கப்பட்டது. அதனால் இனிமேல் ஆப்பிளில் 9 என்ற எண் கொண்டு ஒட்டப்பட்ட பழங்களைப் பார்த்து வாங்குங்கள்.

Sharing is caring!