உயிரைக் கொல்லும் கோழிக்கறி

தமிழர் உணவுகளில் முக்கியமான, தவிர்க்க முடியாத ஒரு உணவு என்றால் அது கோழிக்கறி என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

கிராம மற்றும் நகர் புறங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கும், சளி மற்றும் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்களுக்கும் கோழிரசமும், கோழிக் குழம்பும் சமைத்துக் கொடுக்கும் வழக்கம் இப்போதும் வழக்கத்தில் உள்ளது.

குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கும், எடை குறைவாக இருக்கும் ஆண்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் இதய நோய் உள்ளவர்களுக்கும், கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் அன்றும், இன்றும் மருத்துவ குணமும், சத்துக்களும் நிறைந்ததாக கருதப்பட்ட நாட்டுக் கோழி இன்றும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இன்று பிரபலமாக இருக்கும் பிராய்லர் சிக்கனும், நாட்டுக்கோழியும் ஒன்றா… என்றால், நிச்சயமாக இல்லை. என்பதே உண்மை.

நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிகளவு புரதச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் இருப்பதாக, சிக்கன் கம்பெனிகளும், மருத்துவர்களும் இணைந்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். 90 களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்து பேசுவதாக கருதப்பட்டது. ஆனால் இன்று அமெரிக்காவில் பீட்டரம்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள டியூக்கென் ஆய்வில் 40 சதவீதம் கோழிகளில், 22.9 சதவீத ஆண்டிபயாட்டிக் ரசாயனம் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் ஆண்டிபயாடிக் ரசாயனங்களைக் கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம், ஆனால் மனிதர்களுக்கு நோய்களைத்தான் அவை உண்டு பண்ணும்..

இவ்வளவு ஆபத்து நிறைந்த கோழியை நம்முடைய சமையல் முறையில் சில ரசாயனங்களை கலந்து மோசமான தாக மாற்றி வருகிறோம். சிக்கன் 65 தயாரிப்பதற்காக சிவப்பு கலரில் ஒரு பவுடரைப் பயன்படுத்துகிறோமே. அது நம் உடல் உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை நிறைந்திருப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்

Sharing is caring!