உயிரைக் கொல்லும் வெள்ளைச் சீனி

வெள்ளையா இருக்கிறவனெல்லாம் நல்லவன் போலங்கிறதை உணவிலும் கடைப்பிடிக்க தொடங்கிவிட்டோம் என்பதற்கு  உதாரணம் பளபளப்புக்கும் வெள்ளை சர்க்கரை. காலையில் காபி, டீ குடிப்பதில் தொடங்கி சில நேரங்களில் மிதமிஞ்சிய சர்க்கரை கலந்த இனிப்புகளோடு இரவு பாலில் சர்க்கரை கலந்து குடிக்கும் வரை சர்க்கரையில்லாமல் உணவுகள் சுவைப்பதில்லை என்று வாழ்கிறோம்.

சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். நாளடைவில் உடல் உறுப்புகளையும் செயலிழக்க வைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். நமது முன்னோர்கள் கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைமரத்திலிருந்து பெறப்படும் பனங்கற்கண்டு, பனைவெல்லம் போன்றவற்றைதான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். பலகாரங்களில் போடப்படும் இனிப்புகளும் வெல்லத்தில் மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் நாகரிகம் ஆரோக்கியத்தையும் மாற்றிவிட்டது.

கண்களைப் பறிக்கும் பளீர் வெள்ளையில் தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை, கரும்பில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. ஆனால் சர்க்கரை தயாரிக்க பயன்படுத்தும் இராசயனப் பொருள்கள் உடலுக்குக் கடுமையான தீங்கை ஏற்படுத்தக் கூடியவை.

கரும்பிலிருந்து சாறு பிழியும் போது ப்ளீச்சிங் அல்லது குளோரின் கெமிக்கலை ஃப்ளூய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். ஒரு லிட்டர் சாறில் 200 மிலி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடு படுத்துவார்கள். பின்னர் லிட்டருக்கு 0.2% சுண்ணாம்பு கலந்து சல்ஃபர் டை ஆக்ஸைடு செலுத்தி 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தும்போது அதில் உள்ள வைட்டமின்கள் அழிந்துவிடுகிறது.

இதன்பிறகு இன்னும் பலவித ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு சக்கைகள் நீக்கப்பட்டு இறுதியாக படிகநிலைக்கு வருவதற்குள் இன்னும் இன்னும் பல கேடு விளைவிக்கும் ரசாயனங்களின் உதவியுடன் பளபள வெள்ளைச்சர்க்கரையாக உருமாறுகிறது. உடலில் பல உறுப்புகளையும் சிதைக்க தொடங்குகிறது….

சத்துக்களே இல்லாமல் உடலுக்குள் செல்லும் சர்க்கரை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸாக பிரிகிறது. எளிதில் ஜீரணமாகும் குளுக்கோஸ் என்றாலும் பிரக்டோஸை ஜீரணிக்க ஈரல் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. இதனால் உடலின் இன்ஷ்யூரன்ஸ் சுரப்பு  பாதிக்கப்படுவதோடு சர்க்கரையால் உண்டான ரசாயனம் நிறைந்த உணவுகள் கொழுப்புகளாக சேர்க்கப்படும். சர்க்கரையில் உள்ள அதிகப்படியான அமிலம் உடலில் சோர்வை உண்டாக்குவதால் அதை ஈடுசெய்வதற்கு எலும்பு மற்றும் பற்களில் உள்ள கால்சியம்  உறிஞ்சப்படுகிறது.

இப்படிதான் உடலுக்குள் நுழைந்து நாளடைவில் இது மெல்ல மெல்ல தொற்றா நோயாக உடலை உருக்குலைத்து விடுகிறது. குடல்புண், உடல் பருமன், பற்களில் சொத்தைகளை உண்டாக்குவது, இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு இப்படி இன்னும் இன்னும் ஆபத்துகளை உண்டாக்கிகொண்டே போகிறது பளபள சர்க்கரை…

நான் மாறிவிட்டேன்… கருப்பட்டிக்கும், பனங்கற்கண்டுக்கும்,,, நாட்டுச் சர்க்கரைக்கும்….. நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்?

Sharing is caring!