உயிரை பறிக்கும் கொடிய விஷமாக மாறிய வாழைப்பழம்!

வாழைப் பழம் எளிமையானது. எல்லாருக்கும் பிடித்தது. இனிமையானது. வாழைப் பழ காமெடியும் நகைச்சுவையானது என இந்த பழத்தைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

அத்தனை சத்துக்கள் நிறைந்தவை. எல்லா விட்டமின்களும் ஒருசேர வாழைப்பழத்தில் மட்டும்தான் இருக்கிறது. அதோடு பொட்டாசியம் மற்றும் நார்சத்துக்களும் உள்ளது.

பொட்டாசியம், உடலிலுள்ள செல்களில் சோடியத்தை அதிகப்படுத்தாமல் கட்டுக்குள் வைக்கும் பண்பு கொண்டவை. பொட்டாசியம் அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. அதோடு நார்சத்தும் சேர்ந்து இதயத்தை மிக பத்திரமாய் பார்த்துக் கொள்ளும்.

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். கண்ணிற்கு நல்லது. ஒரு நாளைக்கு உணவுகளோடு ஒரு வாழைப்பழமும் சேர்ந்து சாப்பிட்டால் தேவையான சத்துக்கள் நிறைவுபெறும் என சொல்லலாம்.

வாழைப்பழத்தின் விலை மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு, அதுமட்டுமின்றி இது பசியினை கட்டுப்படுத்தக்கூடியது. இதனால்தான் உலகில் உள்ள பெரும்பகுதியான மக்கள் வாழைப்பழம் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

இதனை பயன்படுத்திதான் நம்மிடையே இந்த விஷத்தை வாங்க வைத்து நம்மை நோயில் விழவைக்கிறார்கள்.

இந்தியாவில் வாழை உற்பத்தியில் தென்மாநிலங்களே முன்னணியில் இருக்கிறது.

ஆனால் இன்றைய உலகில் கலப்படம் இல்லாத, செயற்கை முறையில் தயாரிக்கபடாத உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இதற்கு வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கா என்ன?. இந்த கலப்பட உணவுகள் நன்மையை வழங்காவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்காமல் இருந்தாலே போதும். ஆனால் இவை நம் உயிரை வாங்கும் அளவிற்கு ஆபத்தானவை.

தற்போது அனைத்து பழ கடைகளிலும் கிடைக்கும் ஒரு பழம் இந்த மோரிஸ் வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கும்போது இந்த பழம் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும்.

அளவில் பெரியதாகவும், சுவையும் நன்றாக இருக்கும் இதனை ஏன் விலை குறைவாக விற்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் இது பழமல்ல நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் விஷம்.

இதனை சாப்பிட்டால் அலர்ஜி, புற்றுநோய், தோல் நோய் என்று நம் உயிரை பறிக்கும் அரக்கர்கள் தொற்றி கொள்ளுவார்கள்.

இதெற்கென்ன தீர்வு, நமது நாட்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் அவ்வளவுதான். விலை குறைவென விஷத்தை வாங்கி தினமும் சாப்பிடுவதை விட விலை அதிகமானாலும் ஆரோக்கிய உணவை எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.

Sharing is caring!