உற்சாகத்தைக் கொடுக்கும் க்ரீன் டீ ..

நம்மில் பலருக்கும் டீ, காபி குடிக்காமல் நாட்களே நகர்வதில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். சாப்பாடு கூட இல்லா மல் இருந்துவிடுவேன். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 டீயாவது உள்ளே விடுவேன் என்று பெருமையாக பேசி உடலை கெடுத் துக் கொள்வார்கள்.

தற்போது இஞ்சி டீ, மசாலா டீ, சுக்கு காபி என்று விதவிதமான மூலிகைகள் கலந்து டீ குடித்தாலும் கூட வருகின்ற ஆரோக்ய குறைபாடுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் அநேகம் பேர் க்ரீன் டீ பிரியர்களாகிவிட்டார்கள்.சற்றே கசப்பு கலந்த இந்த டீயில் உடல் ஆரோக்யத்தைக் குறைக்காமல் கூட்டும் சக்தி இணைந்திருப்பதே காரணம். அப்படி என்ன தான் இருக்கு க்ரீன் டீயில்..

க்ரீன் டீயில் என்ன இருக்கு:

க்ரீன் டீயில் இருக்கும் கேட்சின்ஸ் ஒருவகை பாலிஃபினால்கள். இவை ஆன் டி ஆக்ஸிடண்ட் பண்புகளைக் கொண்ட உட் பொருள்களை உள்ளடக்கியிருக்கிறது.ஃப்ளாவனாய்டு, கேட்டச்சின், குவர்செட்டின் என்னும் நன்மை தரும் பொருளும் இதில் உண்டு. அமினோஅமிலங்கள், கார்போஹைட்ரேட்கள் குறைந்த அளவிலும், இரும்புச்சத்து, மக்னீஷியம், கால்சியம் போன்ற தாதுக்கள்அதிகமாகவும் இருக்கின்றது. உடலுக்கு நன்மை செய்யும் வேதிப்பொருள்கள் நீக்கமின்றி நிறைந்திருக்கிறது. இந்த தேயிலையை வேக வைத்து இனிப்பு சேர்க்காதபோது கலோரிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரீன் டீ பயன்கள்:

செல்களைச் சிதைக்காமல் பாதுகாக்கும் வேலையைச் செய்வதால் விரைவிலேயே உண்டாகும் வயதான தோற்றத்தைத் தடுத்து என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

Sharing is caring!