உலகப் புகழ்பெற்ற பழனி முருகனின் வரலாறு

பழனி முருகன் கோவில் முருகனின் சிறப்புடைய கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலானது போகர் சித்தரால் பழனியில் கட்டப்பட்டது. மேலும் பல தகவல்களை இப்பதிவில் காண்போம்.

நாரதர் சிவபெருமானுக்கு கொடுப்பதற்காக ஞானப்பழத்தை கொண்டுவந்தார். அப்பொழுது அங்கிருந்த பரமசிவனின் மனைவி அவர்கள் இந்த ஞானப்பழத்தை தனது குமாரர்களான முருகனுக்கும் விநாயகருக்கும் பகிர்ந்து கொடுக்கும்படி கூறினார். அதற்கு நாரதர் இதனை பகிர்ந்து கொடுத்தால் இதனுடைய மகத்துவம் குறைந்துவிடும் என கூறினார்.   அதற்கு பரமசிவன் தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். முதலில் யார் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப் பழம் கிடைக்குமென்று கூறினார். முருகப்பெருமான் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். ஆனால், விநாயகரோ தனது தாய் தந்தை தான் உலகம் என அவர்களைச் சுற்றி உலகத்தை சுற்றியதாக கூறினார். இதனால், போட்டியில் விநாயகர் வென்று ஞானப்பழத்தை கைப்பற்றினார். ஏமாற்றமடைந்த முருகன் பழனி மலை சென்று குடியேறினார். புராணங்களில் பழனம் என்னும் பெயர்ச் சொல்லிலிருந்து அடிப்படையாக கொண்டு உருவான பெயரே பழனி ஆகும். பழனம் என்ற சொல் விளைச்சலை உருவாக்குதல் எனப்பொருள். அப்படி விளைச்சல் நிறைந்த விளைநிலங்கள் உள்ள பகுதி என்பதால் பழனி என பெயர் பெற்றது. பழனி மலையில் காணப்படும் முருகன் சிலை ஆனது நவபாஷாணத்தால் கொண்டு உருவாக்கப்பட்டது. இதை போகர் சித்தர் என்பவரால் உருவானது. இரவில் இந்த சிலையில் முழுவதுமாக சந்தனம் பூசப்படும்.

Sharing is caring!