உலக மக்கள் நன்மை வேண்டி திருச்சி ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் ஆன்மீக பயணம்

திருச்சி:
உலக மக்கள் நன்மை வேண்டி குஜராத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

நல்ல மழை வளம், மக்கள் நலன் இவற்றுக்காக ஆண்டுதோறும் பல்வேறு கோயில்களுக்கு ஆன்மீக யாத்திரைகள் மேற்கொண்டவர்தான் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வருகிறார்.

அந்த வகையில் இந்தாண்டு குஜராத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இதில் குஜராத் சோமநாத் ஜோதிர் லிங்கம் கோயில், நாகேஸ்வரர் ஜோதிர் லிங்கம் வழிபாடு நடத்தினார். பின்னர் கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மக் கோயிலில் தரிசனம் செய்தார்.

இக்கோயில்களில் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!