உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுங்கள்!

உலர்ந்த பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கும். அதிலும் அத்திப்பழத்தின் உலர்ந்த வடிவம், அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது.

இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேன், நீர் போன்றவற்றில் ஊற வைத்தும் சாப்பிடலாம். அப்படி தினமும் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

 • உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே மலமிளக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளான எரிச்சலூட்டும் குடலியக்க பிரச்சனைகளும் தடுக்கப்படும்.
 • அதிலும் 7 நாள் தொடர்ந்து நீரில் ஊற வைத்த 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட மலச்சிக்கலில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.
 • நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது.
 • இதில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளதால், இது உடலினுள் சென்றதும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட ஆரம்பிக்கும்.
 • மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்யும். ஆய்வு ஒன்றில், உலர்ந்த அத்திப்பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படுவதால், இது ப்ரீ-ராடிக்கல்களை நீக்கி, இதய நோயின் அபாயத்தில் இருந்து தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • தற்போது பெண்களிடையே மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. எனவே பெண்கள் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளைத் தடுக்கும்.
 • உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இரவில் படுக்கும் முன் நீரில் 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள்.
 • இதனால் உடல் பருமன் குறைவதோடு, அடிக்கடி பசி எடுப்பதும் கட்டுப்படுத்தப்பட்டு, எடை அதிகரிக்காமலும் இருக்கும்.
 • உலர்ந்த அத்திப்பழம் பெண்களின் கருவளம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஊக்குவிக்க உதவும்.
 • சர்க்கரை நோயாளிகளுக்கு உலர்ந்த அத்திப்பழம் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ் எனலாம்.
 • இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்ள இன்சுலின் வெளியீட்டின் அளவு நடுநிலைப்படுத்தபடுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Sharing is caring!