ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் குடற்புழுக்களை அழிக்கும் நிலவேம்பு…

டெங்கு  காய்ச்சலின் போது திரும்பிய பக்கமெல்லாம் நிலவேம்பு குடிநீர் குடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தார்கள். டெங்கு காய்ச்சல் தீவிரமாகும் போது இரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து மரணத்தைக் கூட உண்டாக்கிவிடும்.

நிலவேம்பு கஷாயமானது  இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை விரைவிலேயே அதிகரிக்கும் தன்மை கொண்டது என்பதால் தான் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக நிலவேம்பு  குடிநீரை பரிந்துரை செய்தார்கள் சித்த மருத்துவர்கள். இந்த நில வேம்பு டெங்குவை மட்டுமல்ல உடலில் பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாகவும் செயல்படுகிறது.

நிலவேம்பு கஷாயம் என்பது ஒன்பது வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து. இந்த நிலவேம்புதான் சிறியா நங்கை, பெரியா நங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நிலவேம்பு பொடியில் நிலவேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், மிளகு, சந்தனம் என 9 விதமான மூலிகைகள் கலந்திருக்கிறது. இது கசப்பு சுவையைக் கொண்டது.

நிலவேம்பு இலைகள் விட்டு விட்டு வரும் காய்ச்சலையும் தொடர் காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. காய்ச்சல் இருப்பவர்கள் காலை மாலை இரண்டு வேளையும் 30 மிலி அளவில் நிலவேம்பு குடிநீரை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மல மிளக்கியாகவும்  செயல்படுகிறது.

உடலில் இருக்கும் குடற்புழுக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவிடுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழுக்கள் நீங்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் நிலவேம்பு இலையைக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி  குடித்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.

உடலில் பித்தநீர் அதிகமானால் நோய்கள் வரும். பித்தநீர் அதிகரிக்கும் போது வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் உண்டாகும். நிலவேம்பு பொடியை கஷாய மாக்கி குடித்து வந்தால் பித்தநீர் குறைப்பு கட்டுப்படும்.  தலையில் நீர் கட்டு, தும்மல், தலைவலி போன்ற உபாதைகளையும் நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்தும். ஹைப்பர் ஹைப்போ  தைராய்டு, கருப்பையில் தோன்றும் கட்டி, அஜீரணக் கோளாறு, கல்லீரல் கோளாறு போன்றவற்றை நீக்கும்.

நாட்டு மருந்துகடைகளிலும், அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவுகளிலும் நிலவேம்பு பொடி கிடைக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனையுடன் உரிய முறையில் பயன்படுத்தி பெரிய பலன்களை பெறுங்கள்.

Sharing is caring!