எங்கும் தனித்துவமாக காட்சியளிப்பவர்கள் சுவாதி நட்சத்திரக்காரர்கள்…

வைரக்கல் ஜொலிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது சுவாதி நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான். இந்நட்சத்திரத்திரக்காரர்கள் துலாராசியைக் கொண்டவர்களாவார்கள். இந்நட்சத்திரத்தின் சிறப்பு பற்றி ரஸகுளிகை சாஸ்திரத்தில் கடலில் சிப்பிகள் முத்தாவது சுவாதி நட்சத்திர நாளில்தான் என்று குறிப்பிட்டுள்ளது.

சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அம்சமாக கொண்டிருப்பீர்கள். குரு என்பதாலேயே புத்திசாலிகளாகவும், தைரிய சாலிகளாகவும் விளங்குவீர்கள்.  அன்பும் இரக்க குணமும் கொண்டிருப்பீர்கள். நினைத்ததை அடைய சோம்பலின்றி சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சனியை அதிபதியாகக் கொண்டவர்கள். அத்தியாவசிய பொருளாக இருந்தாலும் ஆடம்பர பொருளாக இருந்தாலும் கடுமையான உழைப்பின் மூலமே அடைவீர்கள். பிறர் நலம் விரும்பாமல் சுயநலம் விரும்புவீர்கள். அதிக பொருள்களை ஈட்டுவீர்கள். தொழில் புரிபவர்களாக இருந்தாலும் பணியில் இருந்தாலும் தலைமை பண்பில் சிறந்து விளங்குவீர்கள். நட்பில் சிறந்தவர்களாக இருப்பீர்கள்.

சுவாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சனி பகவானை அம்சமாக கொண்டிருப்பீர்கள். வெற்றிகளைத் தக்கவைத்து கொள்வதில் கடும் சிரத்தை இருப்பதால் இலேசான கர்வத்தைக் கொண்டிருப்பீர்கள். பாசம் கொண்ட நீங்கள் முன்கோபியாக செயல்படுவதைக் குறைத்துக்கொண்டால் வளர்ச்சி விரைவாக இருக்கும்.

சுவாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அம்சமாக கொண்டிருப்பீர்கள். உங்களின் பேச்சால் எல்லோரையும் வசீகரித்துவிடுவீர்கள். மன வலிமை மிக்கவர்கள் என்பதால் சுதந்திரமாக செயல்படவே விரும்புவீர்கள். இறை நம்பிக்கை  கொண்டவர்களாக இருப்பீர்கள். தெய்வத்தின் அனுகூலம் எப்போதும் இருக்கும்.

சுவாதி நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கையோடு விளங்குவீர்கள். கல்வி கேள்விகளில் சிறப்பாக இருப்பதோடு கலைகளிலும் ஆர்வமிக்கவர்களாக இருப்பீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டால் விரைவில் முன்னேறலாம். எங்கும் தனித்துவமாக காட்சி அளிப்பீர்கள். அரசாங்கத்தில் பணி புரிந்தாலும், தொழிலில் இருந்தாலும் உங்களுக்கான இடம் சிறப்பாக இருக்கும்.

Sharing is caring!