எச்சரிக்கை… இரவு தூக்கத்தைத் தொலைத்தால் நோயாளியாக வலம் வருவீர்கள்…

இன்று செய்ய வேண்டிய வேலை நாளை தள்ளிப்போகிறதா பரவாயில்லை. இன்று சற்று ஓய்வெடுத்து விட்டு நாளை செய்யலாம் என்று தள்ளி வைக்கிறீர்களா? அதுவும் பரவாயில்லை. இது சகஜமானதுதான். பெரிய குற்றம் இல்லை.

இதையே வாழ்க்கைமுறையில் எடுத்துக்கொண்டால் உணவை ஒருவேளை தள்ளிப்போடலாம் அதனால் ஆரோக்ய குறைபாடு வந்துவிடாது. ஆனால் தூக்கம். இரவு உறக்கத்தை மறுநாள் பகலில் ஈடு செய்துகொள்ளலாம் என்று நினைத்தாலும் உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதே உண்மை.

சுப நிகழ்ச்சிகளில் எப்போதேனும் ஒருமுறை  இரவு கண்விழிப்பது வழக்கம். அதற்கே நான்கு நாள்கள் களைப்பு தீராமல் சோர்வாக இருப்போம். தற்போது ஐடி நிறுவனங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலான தனியார் நிறுவனங்களிலும் கூட பணிபுரிபவர்கள் ஷிப்ட் கணக்கில்  பகல் இரவு என்று மாறி மாறி வேலை செய்கிறார்கள். இரவு தூக்கம் என்றால் மிக சாதாரணமாக இவர்கள் சொல்வதெல்லாம் பகல் பொழுது இருக்கே. அப் போது தூங்கி கொள்ள வேண்டியதுதான் என்பதே.

இரவு நேரஅமைதியும், கும்மிருட்டும் கொடுக்கும் மனஅமைதியைப் பகல்வெளிச்சம் கொடுக்காது. மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியில் மெலடோனின் சுரப்பதால்தான் நமக்கு தூக்கம்வருகிறது. இந்த மெலடோனின் சுரப்புக்கும் குறிப்பிட்ட நேரம்உண்டு. இவைபகலில் சுரப்பதில்லை. இரவு நேரங்களில் மட்டும் சுரக்கும்.

பகல் பொழுதில் நாம் வெளிச்சத்தை உணரும்போதே இந்தமெலடோன் சுரப்பு நின்றுவிடும், அப்போது தூக்கம் கலைந்து விழிப்புஉண்டாகும். அத னால் பகலில் தூங்கினாலும் அது உடலுக்கு ஒய்வுதான் தவிர நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் என்று சொல்ல முடியாது.இதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் மாதம்ஒரு ஷிப்ட் என பகல், இரவு மாறிமாறி வேலைப்பார்ப்பவர்களே..

இவர்கள் உறங்கும் பழக்கத்தை அவ்வப்போது மாற்றும் போது விழிப்பையும், உறக்கத்தையும் கட்டுப்படுத்தும் மூளையானது குழப்பமடையும். இதனால் உறக்கமின்மை என்னும் நோய் எளிதாக தொற்றிவிடும். வருடக்கணக்கில் இந்நிலை தொடர்ந்தால் உடலில் பலவிதமான நோய்கள் உண்டாகும்.

Sharing is caring!