எடையை குறைக்க கேரள மக்களின் அற்புத ரகசியம்!

இன்றைய காலகட்டத்தில் குறைவான அளவில் உணவை சாப்பிட்டாலும் உடல் எடை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சிலருக்கு அதிகரித்து கொண்டே போகும்.

திடீர் என்று அவர்கள் பூசணிக்காய் போன்று விரைவில் வீங்கிவிடுவார்கள்.

அதற்கு தான் இந்த குறிப்பு. உடல் எடை இழப்பிற்காக கேரள ஆயுர்வேத முறை கூறும் சில ஆரோக்கிய மருத்துவ முறை இது. தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ஒரு மாற்றத்தினை காணமுடியும்.

 • எடையைக் குறைக்க வேண்டுமானால் உணவில் அடிக்கடி பாகற்காயை சேர்க்க வேண்டும்.
 • நார்ச்சத்துள்ள பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
 • குறிப்பாக மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. இந்த பழங்கள் நம் வயிற்றை நிரப்புவதோடு, ஆரோக்கியமான உணவு வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.
 • உடல் எடையைக் குறைக்க நீர் பெரிதும் உதவியாக இருக்கும்.
 • நீரை அதிகம் குடிப்பதால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வழி செய்யும். இதன் விளைவாக உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும்.
 • இரத்தம் மற்றும் உடலை சுத்தம் செய்யும் பொருட்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
 • அந்த பொருட்களாவன மஞ்சள், வேப்பிலை, இஞ்சி, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் போன்றவை. இந்த பொருட்களை எந்த வடிவில் வேண்டுமானாலும் ஒருவர் உட்கொள்ளலாம்.
 • உடல் எடையைக் குறைக்க நினைத்தால் தினமும் அதிகாலையில் அரை மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
 • நீச்சல் தெரிந்தால், அதன் மூலம் இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
 • இல்லாவிட்டால், பேட்மிண்டன், ரன்னிங், சைக்கிளிங் போன்றவற்றை கூட மேற்கொள்ளலாம். இவை எதுவும் செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள், வெறும் நடைப்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது.
 • அன்றாடம் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.
 • இதனால் உடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு, மெட்டபாலிசம் அதிகமாக தூண்டப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும்.
 • உடல் எடையைக் குறைக்க பட்டினி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
 • அதேப் போல் தினமும் 2-3 வேளை அதிகளவு உணவு உண்பதற்கு பதிலாக 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை லேசான உணவு உட்கொள்ளுங்கள். இதன் மூலம் நிச்சயம் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்கலாம்.

Sharing is caring!