எதிரிகளை வெல்லும் திறன் படைத்த புஷ்கல யோகம் இவர்களுக்குத் தானாம்..!

பிறப்பு ஜாதக ரீதியாக இந்த யோகம் அமைந்தவர்கள் செல்வம், செல்வாக்கு, கவுரவம், திறமையான பேச்சாற்றல், அரச பதவி மற்றும் எதிரிகளை வெல்லும் திறம் ஆகிய நன்மைகளை பெறுவார்கள்.இந்த யோகத்தை ஐந்து விதமான கிரக அமைப்புகள் உருவாக்குகின்றன.

அதாவது, லக்னாதிபதி-சந்திரன் ஆகியவை கேந்திரங்களில் இருப்பது, லக்னாதிபதி-சந்திரன் பரிவர்த்தனை, சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி-லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆகியவை நட்பு பெற்று கேந்திரங்களில் இருப்பது, சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி, லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது, லக்னத்துக்கு இரண்டுக்குடைய கிரகம், லக்னம் மற்றும் சந்திரனுக்கு கேந்திரம் ஸ்தானங்களில் அமர்வது ஆகிய நிலைகளில் புஷ்கல யோகம் ஏற்படுகிறது.பிறப்பு ஜாதக ரீதியாக இந்த யோகம் அமைந்தவர்கள் செல்வம், செல்வாக்கு, கவுரவம், திறமையான பேச்சாற்றல், அரச பதவி மற்றும் எதிரிகளை வெல்லும் திறம் ஆகிய நன்மைகளை பெறுவார்கள். சம்பந்தப்பட்ட கிரகங்கள் பகை, நீசம் பெற்றிருப்பது நல்ல யோக பலன்களை அளிப்பதில்லை. இந்த யோகம் 100 பேர்களில் ஒருவருக்காவது இருக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.

Sharing is caring!