எதிர்வரும் ஆங்கிலப் புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்குமாம்..!! நீங்களும் இந்த ராசியா..?

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பெற்றோர்கள் மற்றும் வயதில் முதிர்ந்தவர்களின் ஆதரவும் ஆசிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். குடும்பத்துடன் சிறிய தூரப்பயணங்கள், ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். இல்லத்தில் தடைபெற்றிருந்த விவாகம் போன்ற சுப காரியங்கள் திடீரென்று நடந்தேறும். வீட்டிலும் வெளியிலும் சந்தோஷத்துடன் வலம் வருவீர்கள். செய்தொழிலில் படிப்படியான உயர்வுகளைக் காண்பீர்கள். அநாவசியச் செலவுகள் மறைந்து உபரி வருமானமும் வந்து பொருளாதாரம் மேம்பாடடையும்.

புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உடல்நலம், மனவளம் ஓங்க யோகா, பிராணாயாமம் போன்றவைகளைக் கற்றுக் கொள்வீர்கள். அலைந்து திரிந்து செய்த காரியங்களைச் சுலபமாகச் செய்து முடிந்து விடுவீர்கள். அதேநேரம் பட்டாம் பூச்சிபோல் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல்களில் வேகத்துடன் விவேகமும் கூடும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்குகளிலும் வெற்றி பெறுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் கூடும் காலகட்டமாக இது அமைகிறது.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் அனைவரிடமும் நல்லவிதமாகப் பழகி உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அநாவசியப் பேச்சுகளைத் தவிர்த்து “கொக்குக்கு ஒன்றே மதி” என்கிற ரீதியில் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உங்களின் சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். குழந்தைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு கூடும்.

நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். செய்தொழிலிலும் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வெளியூரிலிருந்து சுபச் செய்திகளைக் கேட்பீர்கள். ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களையும் சுறுசுறுப்பாகச் செய்து முடித்து விடுவீர்கள். தடைகள் விலகி புதிய வழிகள் தென்படும். செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்யத் துவங்குவீர்கள். குடும்பத்தை விட்டு விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் நட்புடன் பழகி அவர்களின் உதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். அலுவலகத்தில் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வைக் காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். அவநம்பிக்கை அகலும். பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு இந்த ஆண்டில் நல்ல வருமானம் கிடைக்கும். மனதில் குதூகலம் தாண்டவமாடும். புதிய முதலீடுகளையும் சிறிது செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் நன்மை தரும் திருப்பங்களைக் காண்பார்கள். கட்சி மேலிடத்தால் பாராட்டப் பெறுவீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் அடங்கி நடப்பார்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் தாங்கள் ஈடுபட்டுள்ள துறையிலுள்ள நுணுக்கங்களை நன்றாகப் புரிந்து செயல்படுவீர்கள். சிந்தனைகள் தெளிவாக இருப்பதால் எத்தகைய கடுமையான சூழ்நிலையையும் சரியாக உள்வாங்கிச் செயல்படுவீர்கள். ரசிகர்களின்ஆதரவும் நன்றாகத் தொடரும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமையை பேணிக் காக்கும் ஆண்டாக இந்த 2020 }ஆம் ஆண்டு அமைகிறது. பெற்றோரின் ஆதரவும் அவர்களால் தன வரவும் உண்டாகும். சிலருக்கு புதிய வீட்டிற்கு மாறும் வாய்ப்பும் உண்டாகும். மாணவமணிகள் நன்றாக உழைத்துப் படிக்கவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடுவீர்கள். கல்வி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெற்றோரை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் வரவேற்புகள் கூடும். உயர்ந்தவர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். குழந்தைகள் சொற்பேச்சு கேட்டு நடப்பார்கள். குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

அன்றாடத் தேவைகளும் சரியாகப் பூர்த்தியாகும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பித்து நவீனமாக்குவார்கள். சிலருக்கு எதிர்பாராத பதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரத் தொடங்கும். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். உடலில் இருந்த நோய்கள் நீங்கி புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். வருமானம் சீராகத் தொடங்கி பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள்.வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து முடித்து விடுவீர்கள். வம்பு வழக்குகளிலிருந்தும் தள்ளி இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் தக்க ஆலோசனைகள் பெற்று முடிவு செய்யும் காலகட்டமாக இது அமையும்.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் மனதிற்கினிய பயணங்களைச் செய்ய நேரிடும். டென்ஷன்கள் குறைந்து தெளிவாகச் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் அலட்சியப் போக்கைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளையும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்துவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பங்குவர்த்தகத்தில் பெரிய வருமானம் எதிர்பார்க்க முடியாது.பெற்றோரின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டி வரும். மருத்துவச் செலவுகளும் செய்ய நேரிடும். உடன்பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். செய்தொழிலிலும் அகலக் கால் வைக்க வேண்டாம்.

தேவைகளை நல்லபடியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்கள் எண்ணங்களை உறுதியுடன் செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். தன்னம்பிக்கை குறையும் நேரங்களில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும். சொற்பொழிவுகளுக்குச் சென்று உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும். புதிய நண்பர்களையும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் வேலையில் சுமை அதிகரித்தாலும் வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படாது. அலுவலகத்தில் உங்கள் கௌரவத்திற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக நடக்கும்.

வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவார்கள். செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகளைச் செய்யாமல் விரைவில் விற்கும் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். விவசாயிகளுக்கு விளைபொருள்களால் லாபமடைவார்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளைத் தேடிப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொண்டு உங்கள் செயல்களை முடிப்பீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். நண்பர்களால் ஏற்றம் பெறுவீர்கள். எவருக்கு வாக்கு கொடுக்க வேண்டாம். கலைத்துறையினர் விழிப்புடன் இருந்து ஒப்பந்தங்களை நிறைவேற்றுவார்கள். சக கலைஞர்களையும் பக்குவமாகப் பேசி சமாளிப்பீர்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு பெற்றோர் வழியில் பெருமைகள் வந்து சேரும். பிள்ளைகளால் பெயரும் புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உடன்பிறந்தோரால் நன்மை உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்நிலையில் கவனம் எடுத்துக் கொள்ளவும். உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு பதற்றப்படாமல் வேலைகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அனைத்து காரியங்களையும் மனித நேயத்துடன் செய்து முடிப்பீர்கள். அனைவரும் பாராட்டும்படியாக நடந்துகொள்வீர்கள். முடிவுகளை ஓரளவு அனுமானித்து செயல்படுத்தி காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் தங்கு தடையின்றி நீருற்றுபோல் வந்து கொண்டிருக்கும். இதனால் புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். எடுத்த செயல்களில் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள்.

செய்தொழிலை வெளியூருக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள். அரிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கோடு போட்டால் ரோடு போடுவார்கள் என்பதுபோன்று புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் எதுவும் ஏற்படாது. ஆன்மிகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வருமானத்தின் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். பழைய காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைத் தூசித் தட்டிச் செயல்படுத்த முனைவீர்கள். நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்களும் நடந்தேறும்.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்திற்கு சற்று கூடுதலாகச் செலவு செய்வீர்கள். பணவருவாய் அதிகரிக்கும். மேலும் எதிர்பாராத இடங்களிலிருந்தும் பணவரவு உண்டாகும். குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். அன்பினால் மற்றவர்களைக் கவர்வீர்கள். சிலருக்கு அசையும் அசையாச் சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். அரசாங்கத்திலிருந்து நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகளும் கிடைக்கும்.

அரசு அதிகாரிகளுடன் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நட்பு வட்டாரத்தில் உங்கள் தனித் த ன்மையை வெளிக்காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். அனுபவஸ்தர்கள், முதியவர்கள் இவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும். பங்குவர்த்தகத்தில் அளவோடு ஈடுபடுவீர்கள். தேவையான ஆகாரத்தையும் தக்க ஓய்வையும் எடுத்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த புத்தாண்டில் அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையக் காண்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைத் தானாகவே முன் வந்து பகிர்ந்து கொள்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை பரிவுடன் கவனிப்பார்கள். பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் சீராக காணப்படும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரத்தை செய்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அனைத்து விஷயங்களையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுத்தவும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் உழைப்பிற்குத் தகுந்த பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவார்கள். புதிய குத்தகைளை நன்றாக ஆலோசித்து பிறகு எடுக்கவும்.அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். ஆனாலும் அவற்றை முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவ்வப்போது குறுக்கீடுகள் ஏற்படும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினர் திறமைக்கேற்ற வருமானத்தைப் பெறுவார்கள். திறமையை தக்க இடங்களில் வெளிப்படுத்தி பாராட்டுவார்கள்.பெண்மணிகள் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக் கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். வருமானம் சீராக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். நன்றாக உழைத்து முதலிடத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். எதையும் சிந்தித்துச் செயல்படுத்துங்கள்.

உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் எண்ணங்களை உறுதியாகச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினரின் ஊக்கமும் உங்களின் முயற்சியும் வெற்றியின் கதவைத் திறக்கச் செய்யும். வேலையில் நற்பெயரெடுப்பீர்கள். பொருளாதாரத்தில் சாதனைகளைச் செய்வீர்கள். உங்கள் தனித்தன்மை வெளிப்பட்டு பரிமளிக்கும். கடினமாக சுறுசுறுப்பாக உழைத்து காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் பேணிக் காப்பீர்கள். மனோபலத்தை அதிகரிப்பதற்கு டென்ஷன் இல்லாமல் தெளிவாக இருப்பீர்கள். பணவரவு நன்றாக இருப்பதால் எதிர்காலத்திற்கு சீரிய வழிகளில் முதலீகளைச் செய்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பழைய கடன்களை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சுற்றுலா சென்று மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள். புதிய ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் போராட்டங்கள் மறைந்து நிம்மதி சூழும். முக்கிய விஷயங்களில் நடுநாயகமாக இருந்து காரியமாற்றி நற்பெயரெடுப்பீர்கள். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் பெயர் அந்தஸ்து உயரும். சிலருக்கு திடீரென்று திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேல் இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். தான தர்மங்காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். திறமையாகப் பேசி புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். செயல்களால் தனி முத்திரை பதிப்பீர்கள். நெடுநாளாக தீராக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக அமையும். சாதுர்யமாகவும் சாமர்த்தியமாகவும் பேசும் ஆற்றல் உண்டாகும்.மற்றவர்கள் மனஓட்டத்தைப் புரிந்து கொண்டு செயல்முறைகளைக் கையாளுவீர்கள். கொடுக்க வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். துறையில் அனுபவஸ்தர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். பயணங்களாலும் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உடன்பிறந்தோருடன் பேசி அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெறும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். அவர்களிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கலாம். பணவரவுக்கு குறைவு ஏற்படாது. தாமதங்கள் தடங்கல்கள் ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைத்து விடும்.வியாபாரிகள் பொறுமையுடன் இருந்து வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிறு நஷ்டங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்தும் எதிர்பார்த்தபடி முடியும். புதிய முதலீடுகளை தைரியமாகச் செய்யலாம் கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலனை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை யோசித்து எடுக்கவும்.

அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சியில் முக்கிய பதவிகள் கிடைக்கும். பெயர், புகழ் கூடும். தொண்டர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பை நல்குவார்கள். ஓர் அதிர்ஷ்ட சாலியாகவே வலம் வருவீர்கள். கலைத்துறையினர் இந்த புதிய வருடத்தில் நல்ல வருமானம் காண்பார்கள். செயல்களில் தாமதம் ஏற்பட்டாலும் செல்வாக்கு குறையாது.பெண்மணிகள் மன நிம்மதி பெறுவார்கள். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனைகள் செய்வீர்கள். நண்பர்களிடம் ரகசியங்கள் பேச வேண்டாம்.

Sharing is caring!