எது நல்ல நாள், எது கெட்ட நாள்..?

இன்னிக்கு எனக்கு நாளே நல்லா இல்ல என்று சொல்வது வேறு. இன்றைய தினம் எந்த சுபகாரியத்துக்கும் நல்ல நாள் அல்ல என்பது வேறு. ஆனால் இவை இரண்டுமே  உண்மையல்ல என்கிறார்கள்.  நவீன உலகில்  எல்லாமே மாறி விட்டது ஆனால் இத்தகைய  பழக்கங்கள் மட்டும் மாறவே இல்லை என்று முணுமுணுப்பவர்களும் உண்டு.

பொதுவாக இறைவனை நினைத்து செய்யும் அனைத்து காரியங்களும் நல்ல விதமாக இருக்கும்பட்சத்தில் அவையெல்லாம் சிறப்பாகவே முடியும்.  நல்ல நேரம் இல்லை என்று தவிர்க்கப்பட்டால் பிரசவ வலி  உச்சகட்டமாக இருக்கும் போது  நல்ல நேரம் வரும் வரை காத்திருக்க முடியுமா?  என்று விதண்டாவாதம் செய்பவர்களும் உண்டு.

நல்ல நாள் அல்லாத நாட்களில் வரும் செல்வத்தைத் திருப்பி அனுப்பிவிடு கிறோமோ. அந்நாளில் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் வருங்காலத் தில் பெரிய பதவிகளில் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  நல்ல நாளில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தாயை பிரசவிக்கும் நேரத்தில் இழக்காமல்  இருக்க வேண்டுமே.  ஆக நல்லநாள் என்பதும் கெட்ட நாள் என்பதும் நாள்களில் அல்ல.  எண்ணங்களில்தான் என்கிறார்கள்.

காலையில் எழும்போதே பிடித்த கடவுளை வணங்கி உள்ளங்கை பார்த்து இன் றைய தினம் எல்லாமே சுமுகமாக நடைபெறவேண்டும்  என்று மனதில் நம்பிக்கையோடு சொல்லும்  நேர்மறை எண்ணங்கள் தான் அப்படியே நடக்கவும் செய்யவைக்கின்றது.  எழும்போதே சலித்து  மனம் முழுக்க சங்கடங்களை சுமந்தபடி இன்னிக்கு என்ன பிரச்னையை சந்திக்கபோகிறோமோ என்று  நினைத் தால்  நமது எண்ண அலைகள் எதிர்மறையாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் சங்கடங்களை சந்திக்காமல் நாளை முடிக்கமாட்டோம் என்பதை ஆன்மிக பெரிய வர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அறிவியல் ரீதியாக சில நாட்கள் சில நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைக்கப் பட்டுள்ளதை   உ டல் ஆரோக்யத்துக்கு நன்மையாக கூறியுள்ளது. இவையெல் லாம் ஏற்கக்கூடியதுதான். அப்படி அந்நாளில் செய்ய வேண்டும் என்று இருந்தால் பிரம்மமுகூர்த்தத்தில் செய்து எவ்வித தோஷமும் தீங்கும் இல்லாமல்  வெற்றி யைப் பெறலாம். ஆனால்  இதைப் புரிந்து கொள்ளாமல் நல்ல நாள், கெட்ட நாள் என்று உருவாக்கி  தொட்டதெற்கெல்லாம் நேரம் பார்ப்பவர்கள்  சகுனம் பார்ப்பதும் தங்களுக்குள்ளேயே அசுப சகுணமாக மாற்றி  சுற்றியிருப்பவரையும்  குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே இறைவனது கணிப்பின்படி குறித்த நேரத்தில் குறித்த நிகழ்வுகள் நடக்கிறது. தர்ம வழியை மீறிய அதர்ம வழியை நாடாமல் இறைவனின் துணையை வேண்டி தொடங்கும் எல்லா  நேரங்களும் நல்ல நேரங் களே.. எல்லா செயல்களும்  நல்ல செயல்களே.

Sharing is caring!