எதை நினைக்கிறாயோ அதுவே நடக்கும்….

நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது இறைவனது கணக்கு. விதையிட்டு நீரூற்றி பராமரிக்கப்படும் செடி துளிர்த்து விருட்சமாய் வளர்ந்து இளைப்பாற நிழல் தரும். அதுபோல நல்ல எண்ணங்களையும், இறை சிந்தனைகளையும் கொண்டு தர்மம் தவறாமல் வாழும் ஒருவன் இறைவனிடம் முக்தி பெறுகிறான்.

எண்ணங்கள் தான் சக்தியாக வலுப்பெற்று உருமாறுகிறது. நல்லவற்றை மட்டுமே நினை என்று ஆன்மிகவாதிகள் சொல்வதற்கும் இது தான் காரணம். ஒருமுறை பிரம்மாவும், பிள்ளையாரும் சந்திக்க நேர்ந்தது. மனிதன் நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் என்ன நடக்கும் என்று  கேட்டார் குறும்புக்கார பிள்ளையார். அதை சொல்வதை விட காண்பிப்பதே சரி என்று பூலோகத்துக்கு பிள்ளையாருடன் வந்தார் பிரம்மா.
சோம்பேறி மானிடன் ஒருவன் இருந்தான். நேர்மறையிலும் எதிர்மறை எண் ணங்களை கொண்டவன் அவன். இவர்கள் சென்ற நேரம்  பாறைக்கடியில் இளைப்பாறுதலுக்காக அமர்ந்திருந்தான். வெயில் உச்சியை பிளந்துவிடும் போல இருக்கிறதே.. தண்ணீருக்கு எங்கே போவது… என்று  மனதுக்குள்ளே முனகினான். பாறைகளின் இடுக்கில் இருந்து தண்ணீர் சொட்டியது.  இந்த அழுக்கு தண்ணீரையா குடிப்பது… என்று  அலட்சியம் செய்தபடி  தண்ணீரை அள்ளி குடித்தான். நேரம் செல்ல செல்ல  வெயிலின் உக்கிரத்தால் வெளியே செல்ல பயந்து பாறையிலேயே பதுங்கினான். பசிக்குதே… என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.  எங்கிருந்தோ பறந்துவந்த கிளி  அணில் கடித்த பழத்தைப் கீழே போட்டது. அடச்சே நல்ல பழமாக இருக்கக்கூடாதா.. என்று நினைத்து குறை சொல்லியபடியே சாப்பிட்டான்…

இப்போது தூங்க வேண்டும் போல் இருக்கிறது. தூங்கும் போது பக்கத்திலுள்ள காட்டிலிருந்து யானை கூட்டம் வந்தால் என்ன ஆவது என்று நினைத்தப்படி விழிப்புணர்வோடு இருந்தான். சிறிது நேரத்தில் யானைகள் கூட்டமாக வந்தது. அடடா நாம் நினைப்பதெல்லாம் நடக்கிறதே.. நல்லவேளை யானையை நினைத்தோம். ஒரு வேளை புலிவந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத் தான். அட சிறிது நேரத்தில் புலியும் வந்தது. அப்போதும் புலியிடமிருந்து தப் பித்தான். ஒருவழியாக மாலை நேரம் வந்தது.நல்லவேளை வீட்டிற்கு கிளம் பலாம். இல்லையென்றால் இந்தப் பாறை உருண்டு நம் தலையில் விழுந்தா லும் விழும். பிறகு நம் கதி அதோகதிதான் என்று நினைத்தான். அடுத்த நொடி பாறை உருண்டு அவன் தலையை நசுக்கியது…..

”என்ன பிரம்மா இப்படி செய்துவிட்டீர்களே?” என்று கேட்டார்  பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார். ”என்ன தொந்தியாரே செய்வது மனிதன் நினைத்த தெல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் என்று நீர்தானே கேட்டீர் அதனால் தான் நேரில் காண்பிக்க அழைத்துவந்தேன்” என்றார்.

எண்ணம் போல் வாழ்வு என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். நல் லதை செய்வோம். நல்லதையே நினைப்போம்.

Sharing is caring!