எத்தனை கோடி ரூபா கொடுத்தாலும் தயவு செய்து இந்த எண்ணில் திருமணம் செய்ய வேண்டாம்..!! ஆபத்து உங்களுக்கு தானாம்…!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான்.

ஏனெனில், திருமணத்திற்கு முன்பு இருந்த ஒருவரின் வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிறகான ஒருவரின் வாழ்க்கைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும்.திருமண எண்ணை வைத்து உங்கள் திருமண வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளலாம்.உதாரணமாக 2019.01.01 அன்று திருமணம் நடந்திருந்தால் இப்படி கூட்ட வேண்டும்.. 2+0+1+9+1+1=14. இப்போது கூட்டுதொகை 14 வந்துள்ளது.1+4 = 5. அதாவது உங்கள் திருமண எண் 5. இப்படி தான் பார்க்க வேண்டும்.

எண் 1:அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த கண்ணியமான ஜோடியாக இருப்பார்கள். புரிந்துகொள்ளல் விட்டுக் கொடுப்பு போன்றவை இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

எண் 2:ஆடம்பர திருமணத்தை விரும்பாதவர்களாக இருப்பார்கள். ஆனாலும் இந்த எண்ணில் நடக்கும் திருமணங்கள் ஆடம்பரமாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இணைபிரியாத இல்லற ஜோடிகள் இவர்கள்.

எண் 3:தன லாபம் அதிகமாக கிடைக்கும். உறவினர் நண்பர்களின் உண்மையான ஆசி இந்த ஜோடிக்கு கிடைக்கும். இவர்களது திருமணம் பெரிதாக பேசப் படும். விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.

எண் 4:இந்த திகதியில் திருமணம் செய்பவர்கள் மரணம்வரை பிரிய மாட்டார்கள். ஒருவரின் எண்ணமே மற்றவரின் வெற்றியாக இருக்கும். எத்தனை கஷ்டம் வந்தாலும் இருவரும் பகிர்ந்துகொள்வார்கள். இவர்களின் வாழ்நாளில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.

எண் 5:அடிக்கடி வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் இருக்கும் ஆனால் அன்பு விட்டுப் பிரியாமல் இருக்கும். இவர்கள் எப்போதும் தங்கள் அன்பு புதிதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

எண் 6:உங்கள் திருமண நாளை முடிந்த வரை எண் 6ல் வையுங்கள். இது குரு பகவானின் ஆசிபெற்ற நாளாகும்.இவர்களது வாழ்வில் அன்பு, செல்வம் போன்றவை குறையாது இருக்கும் ஆனால் ஒன்று இவர்கள் அடுத்தவர்களின் பொறுப்புகளை தலையில் எடுப்பதால் செல்வம் போய்க்கொண்டே இருக்கும். இருப்பினும் இருவருக்கும் இடையில் இருக்கும் நம்பிக்கை, உறுதி என்பன இவர்களின் வாழ்க்கையை அழகாக வைத்திருக்கும்.

எண் 7:உங்கள் திருமண நாளாக தேர்வு செய்திருந்தால் சவால்களை ஏற்க தயாராக இருக்க வேண்டும். எப்போதும் குடும்பத்தில் வாக்கு வாதங்களும் மனக்கசப்புகளும் இருந்துகொண்டே இருக்கும். தம்பதியினர் இடையில் இல்லாவிட்டாலும் பெற்றோரிடம் ஏதாவது சண்டை வந்து கொண்டே இருக்கும்.

எண் 8:உங்கள் திருமண நாளாக இருந்தால் சுவாரஸ்யமான தம்பதியினராக இருப்பீர்கள், எல்லோரும் உங்களிடம் பேசி பழக ஆசைப்படுவார்கள்.ஆனால் தாம்பத்திய வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. என்ன தான் பிரச்சனை என்றாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத தம்பதியினர் இவர்கள் தான்.

எண் 9:இந்த எண்ணை எப்போதுமே திருமண நாளாக தேர்தெடுக்க வேண்டாம். இந்த எண்ணில் செய்யப் படுகின்ற திருமணங்கள் பெரும்பாலும் முறிவை சந்திக்கின்றது.எப்போதும் குடும்பத்திற்குள் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும், இந்த எண்ணில் திருமணம் செய்தால் இருவரின் ஒருவர் நிச்சயம் பிரிந்து செல்வார். அதையும் தாண்டி ஒருவர் அல்லது இருவர் வாழ்ந்தால் அது அவர்கள் செய்த நன்மைகளின் பயனாக இருக்கும்.

Sharing is caring!