எந்த நாட்களில் எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்…?

வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது.ஆகவே, எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி பார்ப்போம்.

திங்கள்:திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாளாகும். ஆகவே திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது.அதோடு நீலகண்டனுக்கு விரதம் இருந்தால் பல நலன்களை பெறலாம்.செவ்வாய்:செவ்வாய்கிழமை துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், வாழ்வில் வளம் பெருகும்.மேலும் முருகப் பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் நவகோள்கள் மகிழ்ந்து நன்மையளிக்கும்.புதன்:புதன்கிழமை விநாயக பெருமானுக்கு உகந்த நாளாகும். எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாட்டு வந்தால் எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்வியாழன்:வியாழக்கிழமை விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும். எனவே வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்தி மற்றும் இரண்டு தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது.

வெள்ளி:வெள்ளிக்கிழமை துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து துர்கை அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.சனி:நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே.ஆகையால் சனிக்கிழமை அன்று சனிபகவானையும் மற்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்தது.ஞாயிறு:நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரியபகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு.ஞாயிற்றுகிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் வழக்கை பிரகாசமாக இருக்கும்.

Sharing is caring!