எந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா?

ஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை செய்வதற்கு மனமில்லாமல் இருந்தாலும், செய்ய வேண்டிய கட்டாயத்தில் செய்யக்கூடியவர்களாக இருப்பர். இதனாலேயே அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் இத்தகையவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை அடைய போராடுவார்கள்.

இலக்குகளை அடைய முடியாவிட்டால், மன அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக உணர்வார்கள். இம்மாதிரியான நிலையில் மனதை அமைதிப்படுத்த சற்று இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் மற்றும் அனைத்து நாட்களுமே சூப்பர் ஹீரோ போன்று இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள், தாம் செய்யும் விஷயம் எங்கு பாழாகிவிடுமோ என்ற ஒருவித அச்ச உணர்வுடனேயே இருப்பர். இந்த உணர்வே பெரும்பாலும் இவர்கள் மனதை அதிகமாக கஷ்டப்படுத்தும். முதலில் இந்த ராசிக்காரர்கள் தங்களைப் பற்றி தாழ்வாக நினைப்பதை விட வேண்டும். மேலும் எந்த ஒரு விஷயமும் வெற்றியடைய, எப்போதும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள், சிறு விஷயங்களுக்கு எல்லாம் எளிதில் மனம் உடைந்துவிடுவார்கள். எனவே இந்த ராசிக்கார்கள் தங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், மனவலிமை அதிகரிக்கும்.

ஒருவேளை யாரேனும் கிண்டல் அல்லது கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து மன அமைதிக்கான செயல்களில் ஈடுபடுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள், எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வை உணர்வார்கள். இரவில் தனியாக சாலையில் நடந்து சென்றாலும், மிகுந்த பதற்றத்துடன் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் தங்களை விமர்சிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் விருப்பத்திற்கு எதிராக எது நடந்தாலும், மிகுந்த கோபம் மற்றும் பதற்றமடைவார்கள். இந்த ராசிக்காரர்கள், தன் விருப்பத்தை நிறைவேற்ற தொடர்ச்சியாக முயற்சித்தும், எதுவும் நடக்காவிட்டால், அதை விட்டுவிட வேண்டும்.

இந்த ராசிக்காரர்கள் தங்களது கவலைகளை மறப்பதற்கு சற்று இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் பலவீனமே அளவுக்கு அதிகமாக சிந்திப்பது. இப்படி அதிகமாக சிந்திக்கும் போது, சிறு பிரச்சனை வந்தாலும், மனதை பெரிதாக பாதிக்கும்.

இந்த ராசிக்காரர்கள், தங்களுக்கு நடக்க வேண்டியது உரிய நேரத்தில் நடக்கும் என நம்ப வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், அதிகமாக சிந்தித்து, அதனாலேயே அதிக மன அழுத்தத்திற்குள்ளாவார்கள். ஒரு செயலால் விளையும் நன்மையை விட, தீமைகளைப் பற்றி அதிகமாக ஆராய்வதே இவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், தங்களுக்கு போதிய சுதந்திரம் கிடைக்காத போது மிகுந்த கோபம் கொள்வார்கள். இத்தகையவர்கள் தங்களுக்கு தனிச் சுதந்திரம் வேண்டும் எனவும், மற்றவர்கள் இவர்களது உணர்வை மதிக்காமல் இருந்தால், அவர்களை இந்த ராசிக்காரர்கள் வெறுப்பதோடு, அதனால் மிகுந்த டென்சன் மற்றும் பதற்றமடைவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொருவரது தனியுரிமை மற்றும் எல்லைகளை மதிக்க வேண்டும் என நினைப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, மற்றவர்கள் அறிவுரை கூறுவது பிடிக்காது. மேலும் இவர்கள் மிகவும் ஓய்வற்றவர்களாக இருப்பதாலேயே, அதிக மனக் கவலையால் கஷ்டப்படுவார்கள்.

மகரம்

மகர ராசிக்கார்கள், தனக்குத் தானே அதிக அழுத்தத்தைக் கொடுத்துக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தத்திற்கு முழு காரணம் அவர்களே தான். இவர்கள் தங்களது இலக்குகளை அடையாத போது, மிகுந்த எரிச்சலுக்குள்ளாவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எதையும் தங்களுக்கு விருப்பமான வழியில் செய்யவே விரும்புவார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, எளிதில் மன அழுத்தத்திற்குள்ளாவார்கள்.

இந்த ராசிக்காரர்கள், அனைத்து விஷயமும் தங்களது விருப்பத்தின் படியே நடக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டால், எந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

மீனம்

மீன ராசிக்காரர்கள், ஒரு விஷயத்தை அளவுக்கு அதிகமாக வெளிக்காட்டும் போது, மனக்கவலை அடைவார்கள். பொது பேச்சுக்கள் பதற்றத்தை உண்டாக்கும்.

பெரிய மக்கள் கூட்டத்தைக் கண்டால், கோபம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த ராசிக்கார்கள், தங்களது அந்தரங்க விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை வெறுப்பார்கள். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள், அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

Sharing is caring!