எனக்கு ஏன் இப்படிப்பட்ட சோகம்?

‘ நாம் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை.  பின், நமக்கு ஏன், இப்படி துஷ்டனாக, தீய குணங்கள் உள்ள பிள்ளை பிறந்தான் என நம்மில் பலர் நினைத்பதுண்டு. வாத்தியார் பிள்ளை மக்கு;  போலீஸ்காரர் மகன் திருடன் என, வார்த்தைகள் எல்லாம், இதனால், வந்தவைதான். இதற்கு என்ன காரணம். இதற்கு மஹாபாரதத்தில் நல்ல உதாரணம் உள்ளது.
குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. துவாரகைக்கு திரும்ப கிருஷ்ணன் முடிவு செய்தான், ஒவ்வொருவராக சந்தித்து, ஊருக்கு திரும்புவதை தெரிவித்தான். திருதராஷ்டிரனும், காந்தாரியும் தங்கியிருந்த அரண்மனைக்கு வந்தான்.
இருவரையும் சந்தித்தான். கிருஷ்ணரை எதுவும் பேசவில்லை. காந்தாரி.  ‘ என்ன அத்தை! என் மீது கோபமா? ஒன்றும் பேச மாட்டீர்களா‘ என, கேட்டான் கிருஷ்ணன்.
காந்தாரியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. பதறினான் கிருஷ்ணன், ‘ என்ன அத்தை1 நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா’ என, கேட்டான் கிருஷ்ணன்.
‘கிருஷ்ணா! என, மனதில் உள்ள கேள்விகளுக்கு நீ பதில் அளிக்க வேண்டும்;  என்னை திருமணம் செய்து கொள்பவருக்கு,  கண் பார்வை இல்லை என்பதை அறிந்தவுடனேயே, என் கண்களை துணியால் கட்டிக் கொண்டேன். அதன்பின், இந்த உலகை நான் பார்க்கவில்லை.
நான்,  பாண்டவர்களை, எனது ஓரகத்தி மகன்கள் என, ஒரு போதும் நினைத்தது இல்லை. பார்த்ததும் இல்லை. என் மகன்களாகவே கருதினேன்.
அப்படியிருந்தும், 100 பிள்ளைகளையும் பறி கொடுத்து, நான் புத்திர சோகத்தில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி நான் என்ன பாவம் செய்தேன்’ என கேட்டாள் காந்தாரி.
கிருஷ்ணன் சிரித்தான். அத்தை! நீ உத்தம பதிவிரதைதான். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை பாண்டவர்களிடம் நீ அன்பாக இருந்ததும் உண்மைதான்.
கண் பார்வையில்லாததால் உன் கணவனால், அரசனாக முடியவில்லை. இதனால், அவன் மனதில், பாண்டு மீது கோபமும், பொறாமையும் இருந்தது.
இதனால், நீ, நமக்கு முதலில் குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தை அரசனாகிவிடும் என நினைத்தாய். அதில், தவறு இல்லை. ஆனால், குந்தியும் கர்ப்பம் அடைந்துள்ளாள் என்பதை நீ அறிந்தவுடன், அவள் மீது உனக்கு பொறாமை ஏற்பட்டது. குந்திக்கு முன் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற , எண்ணம் மட்டுமே உனக்கு இருந்தது.
குந்திக்கு தான் முதலில் குழந்தை பிறந்தது. இதை அறிந்த நீ என்ன செய்தாய்?
கர்ப்பிணியாக இருந்த நீ, அம்மி குழவியை எடுத்து, உன் வயிற்றில் அடித்துக் கொண்டாய். விளைவு, கரு சிதைந்தது, பின்னர், வியாசரின் முயற்சியால், அது, 100 குழந்தைகளாக பிறந்தன.
கர்ப்பவதியாக இருக்கும் போது, பெண்கள், அமைதியாக இருக்க வேண்டும். இறைவனை தியானித்து, மனதில் நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும். கணவனும், மனதில் நல்ல எண்ணங்களுடன், தங்களுக்கு நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என, பிரார்த்திக்க வேண்டும். அப்போது தான், பிறக்கும் குழ்ந்தை நல்ல குண நலன்களுடன் இருப்பான்.
ஆனால், உன் மனதிலும், சரி, உன் கணவன் மனதிலும் சரி, பொறாமையை தவிர வேறு எண்ணம் இல்லை. எப்படியாவது தனக்கு முதலில் குழந்தை பிறந்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அதே பொறாமை குணத்துடன், துரியோதனன் இருந்தான., பாண்டவர்கள் மீதான அவனது பொறாமை, அவனை மட்டுமின்றி, அவனது, 99 சகோதரர்களையும் அழித்தது. கர்ப்பவதியாக இருக்கும் போது, பொறாமை எண்ணத்துடன் நீ இல்லாமல் இருந்திருந்தால், குந்தி போல், உனக்கும் சிறப்பான புதல்கள் பிறந்திருப்பார்கள் என்றான் கிருஷ்ணன். தலை குனிந்தாள் காந்தாரி.
உண்மைதான்,. கர்ப்பவதியாக இருக்கும் போது, கணவனும், மனைவியும் நல்ல எண்ணங்களுடன், ஆன்மிக சிந்தனையில் இருக்க வேண்டும்.
இரண்யனின் மனைவி கர்ப்பம் அடைந்த போது, இரண்யன், காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான், இரண்யன் மனைவி நாரதர் மூலம், மஹாவிஷ்ணுவின் பெருமைகளை கேட்டாள். வயிற்றில் இருந்த சிசுவும் கேட்டது, விளைவு; பிரகலாதன் பிறந்தான்.
அதனால், கர்ப்பகாலத்தில் பெண்கள், சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது சிறப்பு,. கந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி போன்ற துதிகளை சொல்வதும் நல்லது.

Sharing is caring!