என்றும் 16 க்கு கேரட் சாறு

உணவை மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிட்டால் உடலை எந்த நோயும் தாக்காது என்பது தெரியும். ஆனால்  உமிழ்நீர் சுரக்க கேரட்  உதவுகிறது.  உமிழ் நீர் சுரப்பு அதிகரித்தால்  உடலில் உள்ள  கிருமிகள் அழிவதோடு உடலில் செரி மான சக்தியும் அதிகரிக்கும்.

உடல் எடை குறையவும் சருமம் மின்னுவதற்கும் காய்கறிகள் உதவுகிறது. குறிப்பாக கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மாலைக்கண் நோய் வரமால் தடுப்பதோடு கண்  சம்பந்தப்பட்ட கோளாறுகளை யும் அண்டவிடாது. பீட்டா கரோட்டின் ஆன்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. இது நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக்கொண்டே இருப்பதால்  தோற்றத்தில் வயோதிகம் மறைந்து இளமையாக வைத்திருக்கும்.

கேரட்டில் இருக்கும் ஆல்ஃபா கரோட்டின், லூட்டின்  உடலில் இருக்கும் ஊளைச்    சதையைக் குறைக்கிறது. தேவையற்ற கொழுப்புகளையும் இதய வால்வுகளில் உள்ள  கொழுப்பையும் நீக்குவதால் இதய நோய் வருவது தடுக்கப்படுகிறது. புற்றுநோய்  வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

கேரட்டில் என்ன செய்யலாம்? கேரட் சாலட்,கேரட் அல்வா, கேரட் பொறியல், அவியல், குழம்புகளில் பயன்படுத்தலாம்… ஆனால் எல்லாவற்றையும் விட கேரட்டை சாறாக்கி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி கொடுப்பார்கள்…  அதி லும் கோடையில் திட உணவுகளை விட திரவ உணவுகளைத்தான்  விரும்பு  வோம். காலையில் 2 தம்ளர் கேரட் சாறு… அன்றைய தினம் முழுவதையும் உற் சாகமாக வைத்திருக்கும்.

கேரட் சாறு எப்படி செய்வது?

கேரட்-5, பால் – 3 தம்ளர், தேன்  அல்லது நாட்டுச்சர்க்கரை – இனிப்புக்கேற்ப…

கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்து வடிகட்டி அதனுடன் நன்றாக காய்ச்சிய பாலை கலந்து தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து  தேவையெனில் ஐஸ்கட்டி கலந்து பரிமாறவும்.. சுவை யான சத்தான கேரட் சாறை குழந்தைகள் கேட்டு வாங்கி குடிப்பார்கள்.  சரு மத்தோடு ஆரோக்யமும்  மின்னுவதற்கு அன்றாடம் கேரட்டையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்… தினம் கேரட் சாறு கொடுத்தாலும் இன்றுமா என்று கேட்காமல் அழகாக குடித்துவிடுவார்கள் குழந்தைகள்.

Sharing is caring!