என் பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் நான் எப்போதும் இருப்பேன்… ஷீரடி பாபா..!

எங்கிருந்தாலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன். என் பக்தனுக்கு எது தேவையோ அதை நான் முன்கூட்டியே கொடுப்பேன். உள்ளத்தோடும், ஆன்மாவோடும் என்னோடு தம்மை இணைத்துக் கொண்ட பக்தர்களுக்கு மன அமைதி உண்டாகும். பாபாவிடம் நாம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும். நம்பிக்கையோடு சரண் அடையுங்கள். பிறகு பாருங்கள்…. பாபா உங்களை தனி வழியில் அழைத்துச் செல்வதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் 100 சதவீதம் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டினால்தான் உண்மையான வெற்றியைப் பெற முடியும். தொழிலாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி…. தினசரி வாழ்க்கை பணியாக இருந்தாலும் சரி. 100 சதவீதம் ஈடுபாடு இல்லாவிட்டால் அது முழுமை பெறாது. எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நம் மனதை கரைத்து விட வேண்டும். இரண்டற கலந்து விட வேண்டும். பாபாவிடம் நாம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும். நம்பிக்கையோடு சரண் அடையுங்கள். பிறகு பாருங்கள்…. பாபா!

உங்களை தனி வழியில் அழைத்துச் செல்வதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.அதி அற்புதமான, அவதாரப் புரு‌ஷரான சாய்பாபா, தன் வாழ்க்கை மூலமாகவும், வாக்குமூலமாகவும், நாம் எப்படி வாழ வேண்டும், எப்படி முக்தி பெற வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளார். அவர் மக்களை கூட்டி பிரசங்கம் செய்ததில்லை. தம் உபதேசங்களை கேட்டே தீர வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தியதில்லை. ஆனால் அவர் சொன்ன சிறு, சிறு வார்த்தைகள் வைர வரிகளாக மாறி இன்று நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. நீ என்னை நோக்கினால், நான் உன்னை நோக்குவேன். நீ என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நான் உன்னை நோக்கி 10 அடி எடுத்து வைப்பேன்.

சாய் என்று பெயரை எப்போதும் உச்சரிப்பவர்களின் பாவம் தொலையும். சாய்பாபாவிடம் பக்தி கொண்டவர்களில் பலரும் பாபாவிடம் மனம் உருக வேண்டுகிறோம், நைவேத்தியம் படைக்கிறோம், ஆரத்தி காட்டுகிறோம், அன்னதானம் செய்கிறோம். அதற்கு முன்னதாக பாபாவை தெள்ளத் தெளிவாக உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். பிறவிப் பெருங்கடலில் மூழ்கி, அலைகளுக்கு மத்தியில் துரும்பு போல கிடந்து அல்லாடும் நம்மை கரையேற்ற வந்தவர்தான் சாய்நாதர். அவர் இறை அவதாரமாக மட்டுமல்ல அன்பின் அவதாரமாகவும் திகழ்கிறார். யார் எதைக் கேட்டாலும் கொடுத்தார், கொடுத்து வருகிறார்.

Sharing is caring!