எப்பொழுதும் அமைதியை விரும்பும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா ??

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புவார்கள் என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், மோதல்கள் இன்றி இருக்க வேண்டுமென்றும் விரும்புவார்கள்.

மற்றவர்கள் வார்த்தைகள் மூலம் சண்டை போட்டுக் கொள்வது இவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

ஒரு விஷயத்தை பல கண்ணோட்டங்களில் பார்ப்பதும், நேர்மைக்கு ஆபத்து வரும்போது தர்க்கரீதியாக சிந்திப்பதிலும் இவர்கள் வல்லவர்கள்.

இவர்கள் மற்றவர்களின் மீது பழிபோடவோ, மற்றவர்களை அச்சுறுத்தவோ மாட்டார்கள்.

அனைவரும் ஒன்றாக இருக்க இவர்கள் அனைத்து முயற்சியையும் செய்வார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் எப்பொழுதும் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

அவர்களின் குடும்பத்திற்குள்ளோ அல்லது நட்பு வட்டாரத்திலோ ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

இவர்கள் அனைவருடன் தொடர்பு கொள்வது மூலமும், நேர்மையாக பேசுவது மூலமும் நண்பர்களின் பிரச்னையை தீர்க்க முயலுவார்கள்.

இவர்கள் இருவரின் நியாயத்தையும் கேட்பார்கள், தேவைப்படும்போது மட்டுமே அறிவுரைக் கூறுவார்கள்.

தேவையின்றி ஒருபோதும் பிரச்னைகளுக்குள் நுழையமாட்டார்கள்.

மீனம்

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படையாக கூறாமலேயே இவர்களால் புரிந்து கொள்ள இயலும்.

மீன ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், அதேசமயம் அதீத உள்ளுணர்வு கொண்டவர்கள்.

இவர்களின் இரக்க குணம் இவர்களை சிறந்த அமைதியாளர்களாக மாற்றும். மற்றவர்களின் மீது குற்றம் கூறமாட்டார்கள், யாரையும் கெட்டவராக்க முயற்சிக்க மாட்டார்கள்.

இவர்களால் சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியும், மேலும் சூழ்நிலை மோசமாகாமல் இவர்களால் சமாளிக்க இயலும்.

இவர்கள் பிரச்னையை விட அதற்கு தீர்வாக இருப்பதிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களை சுற்றிரி எப்பொழுதும் ஒரு வளையம் இருக்கிறது, இது நேர்மை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

இவர்கள் எதார்த்தமானவர்கள், எனவே அவர்கள் பேசுவதில் எப்பொழுதும் கவனமாக இருப்பதால் இவர்கள் எப்போதும் பதட்டமடைய மாட்டார்கள்.

இவர்கள் மோதலுக்கான தீர்வு காணும் திறமை கொண்டவர்கள் மற்றும் இரு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ள தீர்வுகளை கண்டுபிடிக்க கூடியவர்கள்.

மகர ராசிக்காரர்கள் தான் அமைதியாக இருப்பதுடன் தன்னை சார்ந்தவர்களும் பிரச்னையில் ஈடுபடாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.

இவர்களிடம் மற்றவர்கள் கோபப்பட்டால் கூட அவர்களை தவிர்க்கத்தான் முயலுவார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சூழ்நிலையை அமைதியாக வைத்திருக்கவும், உபயோகமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் புகழ் பெற்றவர்கள்.

கன்னி ராசிக்காரர்கள் சண்டையில் ஈடுபடுபவர்களையும், வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களையும் ஊக்குவிப்பார்கள் அதற்கு பின்னர் பிரச்னையை தீர்ப்பதற்கான வழிகளை சிந்திப்பார்கள்.

சண்டையிட்ட இருவர்களில் ஒருவர் திடீரென இறங்கி வந்தால் அதற்கு பின்னால் கன்னி ராசிக்காரர்களின் குறுக்கீடு கண்டிப்பாக இருக்கும்.

Sharing is caring!