எலும்பு தேய்வை தடுக்கும் பதநீர்

பனை மரம் நமக்களிக்கும் பயன்கள் எண்ணிலட‌ங்காதவை, மழைக்காலத்திற்கு  பனங்கிழங்கு, வெயில் காலத்தில் பதநீர் என சீசனுக்கு ஏற்றார் போல் பனை மரம் பலனை தருகிறது. பனை மரத்தின் வேர்கிழங்கு முதல் அதன் குருத்து வரை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

பனை மரத்தின் நுனியைச் சீவி அதிலிருந்து வடியும் நீரை சுண்ணாம்பு தடவிய பானையில் பிடித்து வைப்பதுதான் பதநீர். மிகவும் சுவைமிக்கது இந்த பானம்.  இதனை கோடை காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை அளித்த கொடை என்றே சொல்லலாம். பதநீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்..

பொதுவாக சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளதால் எலும்பு தொடர்பான‌ நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது  .

கோடை காலங்களில் ஏற்படும் உடல் சூட்டினை தணிக்கிறது பதநீர்.  மேலும் உடல் சூட்டால் ஏற்படும் கொப்புள‌ங்களை சரிசெய்யும் தன்மை கொண்டது.  பழைய கஞ்சியில் பதநீரை கலந்து தடவி வர ஆறாத புண்கள் சரியாகும்.

சிறுநீர் சம்மந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாக அமைவதுடன், சிறுநீர் பெருக்கியாக‌வும் செயல்படுகிறது.

ஜீரண தன்மையை அதிகரிப்பதுடன், மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது பதநீர்.

பதநீரை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மேக நோய் சரியாவதுடன், பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னையும் குணமாகும்.

வெந்தய பொடியை,  சூடுபடுத்திய பதநீரில் கலந்து குடித்துவர  இரத்த கடுப்பு, மூல சூடு குணமாகும்.
மஞ்சளுடன் பதநீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண், வாய்ப்புண் சரியாகிவிடும்.

 உடல் மெலிந்தவர்கள் பதநீரை  தொடர்ந்து சாப்பிட்டு வர  ஆரோக்கியமான உடல் எடை கூடும்.

Sharing is caring!