எல்லாம் கலந்த கலவை மகம் நட்சத்திரக்காரர்கள்

ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட இவை பல்லக்கு வடிவில் காணப்படுகிறது.. மகம் ஜகம் ஆளும் என்று சொல்வார்கள்..  எல்லோருக்கும் இது பொருந்தும் என்று பொய் வாக்குறுதிகளைக் கொடுக்க கூடாது.. ஜாதகத்தில் இருக்கும்  நவக்கிரகங்களின் ஆட்சிகள், அவை இருக்கும் இடம், பகை, வாழ்வு, பார்வை போன்றவற்றைப் பொறுத்தே பலன்களும் அமையும். ஜகத்தையும் ஆளலாம்… ஜகத்தில் வாழ வழியில்லாமலும் போகலாம்..  மகம் நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் சிம்ம ராசியைக் கொண்டிருப்பார்கள்…

மகம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள்.. செவ்வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். அவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்கும். சுற்றியிருப்பவர்களை ஈர்க்கும் குணத்தைக் கொண்டிருப்பீர்கள். அழகிய தோற்றம் கொண்ட நீங்கள் உங்கள் இல்லத்தையும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள்.. பூமி, மனை மீது விருப்பம் கொண்டிருப்பீர்கள். சட்டென்று உணர்ச்சிவசப்படுவது உங்கள் இயல்பாக இருக்கும்.

மகம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள்.. சுயநலத்தை விட பிறர் நலன் விரும்பும் இரக்க குணம் கொண்டவர்கள்.. உங்களைச் சுற்றி எப்போதும் உறவினர் வட்டமும் நட்பு வட்டமும் இருக்கும். கலை துறையில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். பாசமிக்க நீங்கள் உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவீர்கள்.

மகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் புதனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். இயற்கையும் தெய்வபக்தி மிகுந்தவர்கள் நீங்கள் எந்த காரியத்தையும் அடிமுதல் நுனிவரை சென்று ஆழம் பார்த்து விடுவீர்கள்.. சிந்திக்கும் திறனும் செயல்படுத்தும் ஆற்றலும் உங்களிடம் அதிகமாக இருக்கும். உங்களால் இயன்றதை மட்டுமே சொல்வதால் உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்..

மகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்ட நீங்கள் சந்திரனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள்.. சமூகத்தில் எப்போதும் உயர்ந்த செல்வாக்கோடு இருக்க விரும்புவீர்கள். பிறர் நலனை விட சுயநலமே பெரிதென இருக்கும் குணத்தையும் பெற்றிருப்பீர்கள். ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். சுயநலத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவ்வப்போது செய்நன்றி மறந்தவர்களாகவும் ஆகிவிடுவீர்கள்..

மகம் நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் எல்லாம் கலந்த கலவை என்று சொல்லலாம். கோபம், ஆசை, இலட்சியம், பிடிவாதம், நினைத்ததை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்னும் எண்ணம், கலைத்திறமை, தலைமைப்பண்பு என அனைத்தும் கலந்த கலவையாக மகம் நட்சத்திரக்காரர்கள் விளங்குவார்கள்..

Sharing is caring!