ஏன் வெறும் வயிற்றில் காலையில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!

நாம் வாழ்க்கையில் பல குழப்பமான விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறோம். சில பொருட்களை பயன்படுத்துவதற்கான சரியான காரணம் தெரியாமல் இருந்து வந்திருக்கிறோம்.

ஒவ்வொரு பழத்திற்கு ஒரு தனி சிறப்பம்சமும் மகத்துவமும் உண்டு. பழங்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்.

எல்லா வகையான பழங்களும் நமக்கு நன்மை தரும் என சொல்ல முடியாது. ஒரு சில பழங்கள் மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். வேறு சில பழங்கள் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த வரிசையில் தீமை தர கூடிய பழங்களும் உள்ளன.

குறிப்பாக பழமானது சிறிது நிறம் மாறினாலே தீங்கை விளைவிக்குமாம்.

அந்த வகையில் வாழைப்பழத்திற்கு வெவ்வேறு நிறங்கள் இருக்கின்றன. வாழைப்பழமானது மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது.

பச்சை நிறம்

பச்சை நிற பழமனது கசப்பு தன்மை கொண்டதாக காணப்படும். இவற்றில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளதாம். மேலும், இது ஜீரண சக்தியை அதிகரிக்க பயன்படும்.

அத்துடன் குடலில் ஏற்பட கூடிய வீக்கங்களை குணப்படுத்தும்.

மஞ்சள் நிறம்

இவை தான் சரியான நிறத்தில் உள்ள பழங்கள். மிகவும் மென்மையாகவும், அதிக சுவை கொண்டதாகவும், இனிப்பாகவும் இந்த மஞ்சள் நிற பழங்கள் இருக்கும். குறிப்பாக

இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதாம். அதே சமயத்தில், இதில் அதிக அளவில் கிளைசெமிக் இன்டெஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்த்து விடவும்.

சிவப்பு நிறம்

வாழை பழங்களில் இந்த சிவப்பு நிற பழங்கள் மிகவும் ருசியானதாம். இதனை சாப்பிட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும். இந்த வகை பழங்கள் மிகவும்

உடலுக்கு நன்மை தரும். மேலும், இதில் பல வகையான சத்துக்கழும் உள்ளன. எனவே, இந்த வகை பழங்கள் உடலுக்கு நல்லது. ஆண்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான சில முக்கிய தாம்பத்திய பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

குறிப்பு

பச்சை மற்றும் சிவப்பு, மஞ்சள் நிற பழங்களே இதில் சிறந்ததாம். மேலும், பழங்களின் நிறத்தை எப்போதும் கருத்தில் வைத்து கொண்டே, நாம் பழங்களை உண்ண வேண்டும். இதுவே ஆரோக்கியமான உடல் நலத்தை வைத்து கொள்ள எளிமையான வழியாகும்.

வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
  • வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் இது இரத்த அழுத்தம், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், அல்சர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.
  • இதில் அதிகப்படியான் இரும்பு சத்து உள்ளது, இது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. என்ன தான் சத்தான உணவாக இருந்தாலும் இதை வேறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா என்ற விவாதம் இருக்கிறது.
  • பல்வேறு ஆதாரங்களின்படி, வாழைப்பழங்களில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.
  • வாழைப்பழத்தில் உள்ள சக்கரை உங்களுக்கு சக்தியை அளித்தாலும், சில மணி நேரத்தில் அதை உறிஞ்சி எடுக்கிறது. வாழைப்பழங்கள் தற்காலிகமாக புத்துணர்வை அளித்தாலும், பின்னர் தூக்கம் மற்றும் களைப்பாக உணர வைக்கின்றன.
  • வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன. எனவே, இது வயிற்றுப் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். எனவே வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்தால் சிறந்தது.

Sharing is caring!