ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்?

தினமும் வெளியே சென்று வரும் நாம், கூடவே பல தீய சக்திகளையும் கூடவே வீட்டிற்கு அழைத்து வருகிறோம் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. சாலையில் நடக்கும் விபத்துகள்,  தற்கொலைகள், அகால மரணம் உள்ளிட்டவற்றால் உடலை பிரியும் ஆத்மாக்கள், மேலோகம் செல்லும் காலம் வரை, இங்கேயே ஆவி ரூபத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்.

அந்த துர்ஆத்மாக்களை கடந்து செல்லும் போது, அதன் தாக்கம் நமக்கும் ஏற்படும். இதனால், கெட்ட அதிர்வலைகள் வீட்டில் உள்ளவர்களையும் பாதிக்க கூடும். இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வரும் போதும், சுடுகாடு, கல்லறைகளுக்கு சென்று வரும்போதும், இத்தகைய கெட்ட அதிர்வுகள் நம்மை தாக்க வாய்ப்புள்ளது.

அதே போல், கெட்ட எண்ணத்துடன், நம் மீது பொறாமையில், ஏவல், பில்லி சூனியம் ஆகியவற்றை நம் மீது யாரேனும் ஏவினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

இத்தகைய பதிப்புகளில் இருந்து தப்ப  எளிதான, அதே சமயம் சக்தி வாய்ந்த பரிகாரங்கள் உள்ளன.

பெரும்பாலானோர் வீட்டு வாசலில் கண் திருஷ்டி கணபதி படம் வாசலில் தொங்க விடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கவும், பிறர் கண் திருஷ்டி நம் வீட்டில் படாமல் இருக்கவும் இவ்வாறு செய்வது வழக்கம். எனினும்,இது மட்டுமே போதாது.

வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சுவாமி படங்களை பார்த்து வணங்கி விட்டு, நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் தரித்து செல்ல வேண்டும். குறிப்பாக, இரு புருவ மத்தியில் குங்குமம் வைப்பதால், கேட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பலாம்.

Sharing is caring!