ஒரே கோவிலில் 1,008 சிவலிங்கம், ருட்ராக்ஷத்தால் ஆன தேர்… இன்னும் பல அதிசயம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்யவாஹுஸ்வரர் ஆலயத்தில், வருடத்தில், 6 நாட்கள்,சூரிய ஒளி, சுவாமி மீது விழுகிறது.

சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் அஷ்ட பைரவர் எனும் 8 பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம், 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர்.

அஷ்ட பைரவர்களின் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறப்பார்கள். சேலம் மாவட்டம்., அரியனூர் எனும் இடத்தில்., ஒரு சிறிய மலையில்., 1008 சிவலிங்கங்கள் உள்ள ஒரு கோயில் உள்ளது. ஒவ்வொரு லிங்கத்திற்க்கும் ஒரு தனி பெயர் உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். பங்குனி 18., 19., 20 தேதிகளில் உதய வேளையில், சூரியக்கதிர்கள் ;மூலவர் மீது விழுகின்றன.

ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

 திருவண்ணாமலை., சிதம்பரம்., திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்., திருவாரூர்., திருவக்கரை, காஞ்சிபுரம்., மதுரை., திருநெல்வேலி., குடுமியான்மலை தலங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன.
சேலம் காசி விஸ்வநாதர் கோவிலில் முழுவதும்,ருத்ராக்ஷத்தால் ஆன தேர் ஒன்று உள்ளது.

Sharing is caring!