ஒற்றை தலைவலி ஏன் ஏற்படுகிறது

இன்று உலகில் பலர் மிக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக உரிய தீர்வு இன்று வரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.

ஒற்றை தலைவலியின் அறிகுறிகள் என்ன?

அடிக்கடி கொட்டாவி விடுதல்,
கழுத்து வலி
தோள்களில் வலி
தலையின் ஒரு பக்கத்தில் கடுமையான வலி ஏற்படலாம்.
வழக்கமான தலைவலியை விட அதிக நேரத்திற்கு அது நீடிக்கும்
குறித்த நேரத்தில் சுற்றியுள்ள ஒலி, ஒளி, நறுமணம் உடல்ரீதியாக அதிகம் பாதிக்கும்
வாந்தி,
குமட்டல்,
கண்பார்வையில் பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம்.
ஆகியவற்றுடன் தொடங்குவதே ஒற்றைத் தலைவலி. அது கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு நீடிக்கும்.

யாருக்கு எல்லாம் இந்த பிரச்சினை ஏற்படும்?

30 – 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம்.
40 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 90 வீதமானோர் முதல் முறையாக இதற்குள்ளாகின்றனர்.
ஒற்றை தலைவலி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்குப் புதிதாக 1,250 நோயாளிகள் சேர்கின்றனர்.

ஏற்பட காரணம் என்ன?

மனித மூளையின் ஏற்றத்தாழ்வாக இரசாயன அளவு இருக்கும் சந்தர்ப்பத்தில் செரோடோனின் சுரப்பியின் அளவு குறைவடையும்.
அது உடலில் குறைவாக இருக்கும்போதும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகின்றது.
ஒற்றைத் தலைவலி, மரபணுசார்ந்த உடல்நலப் பிரச்சினையாக இருக்கும்
சுற்றுப்புறத்தாலும் வாழ்க்கைமுறையினாலும் ஏற்படவும் கூடும்

சிகிச்சை முறைகள் உண்டா?
ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் இல்லை.
அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்பட்டால் அவதானமாக இருக்க வேண்டும்.
எதனால் தலைவலி ஏற்படுகிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அவற்றைத் தவிர்க்கவேண்டும்.
அறிகுறிகள் ஏற்படும்போது மருத்துவர்களிடம் செல்ல வேண்டும்
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.
வழக்கமாக உடற்பயிற்சி செய்தல்
நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல்
போதுமான உறக்கம்
புகைபிடிப்பதை நிறுத்துதல்
ஆகியவற்றைப் பின்பற்றுவதும் முக்கியம்.
எனினும் வயது அதிகரிக்கும் போது இதன் வலி குறையும் என்பது புதிதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள நற்செய்தியாகும்.

Sharing is caring!