கடன் தொல்லை நீங்க இவரை சுற்றுங்க!

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான, ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது.
சக்கரம் என்பது  சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும்.பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.

சக்கரத்தாழ்வாருக்கு, ஸ்ரீ சுதர்சனர்,ஸ்ரீ சக்கரம், திகிரி,ஸிருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர், என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள். சுதர்சனம் மங்களமானது.
கொடிய முதலையிடம் மாட்டிக் கொண்டு, ஆதிமூலமே என,  அலறிய கஜேந்திரன் என்னும் யானையை காப்பாற்றியது சக்கரத்தாழ்வார் தான்.

கிருஷ்ண பரமாத்மாவின் ஆணைப்படி, சிசுபாலனை அழித்ததும் சக்கரத்தாழ்வார் தான். தீயவர்களை அழிக்கவே ,விஷ்ணு கையில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எனும் ஸ்ரீ சக்கரம்செயல்படுகிறது.

பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வாருக்கு தனி சந்நிதிஅமைக்கப்பட்டிருக்கும்.  அங்கு, முன்புறத்தில், சக்கரத்தாழ்வாரும். பின்புறத்தில் யோக நரசிம்மரும் இருப்பார்கள். 16 திருக்கைகளுடன் சக்கரத்தாழ்வார் காட்சியளிப்பார். வலது பக்த்தில் உள்ள எட்டு கைகளில்,  சக்கரம் ,ஈட்டி ,கத்தி ,கோடரி ,அக்னி ,மாவட்டி  ,தண்டம்,சக்தி ஆகிய ஆயுதங்கள் இருக்கும்.

இடது புறம் சங்கு, வில்,கண்ணி,கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் போன்ற ஆயுதங்களை
கையில் ஏந்தியிருப்பார். நான்கு கரங்களுடன் யோக நரசிம்மர் அருள்பாலிப்பார்.  4 கரங்களும் அறம்,பொருள் ,இன்பம் ,வீடு ஆகியவற்றை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வழங்குவதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் சனிதோஷம் உட்பட, நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
சக்கரத்தாழ்வாரை, சனி மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு. அதிலும், புரட்டாசி சனிக்கிழமைகளில், சக்கரத்தாழ்வாரை, வழிபடுவது பெரும் பலனை தரும்.

Sharing is caring!