கணவன் – மனைவி அன்னியோன்யம் கூட பரிகாரம்

கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும் எளிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பிரச்சனைகள் தீர வழிபிறக்கும். கணவன் – மனைவி ஒற்றுமை எளிய பரிகாரங்கள்

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய்தீபம் ஏற்றி வழிபட கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

இதனை தொடர்ந்து 5 வாரம், 7 வாரம், 9 வாரம், 11 வாரம் என செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைப்பதோடு, பிரிந்திருக்கும் தம்பதிகளும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

Sharing is caring!